ஜி. ராமச்சந்திரன்
- ராமச்சந்திரன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமச்சந்திரன் (பெயர் பட்டியல்)
ஜி. ராமச்சந்திரன்(1904 – 1995) இந்திய விடுதலைப்போராட்ட வீரர், காந்தியவாதி, கல்வியாளர், சமூகச் செயற்பாட்டாளர். மனைவி டி.எஸ். செளந்தரம் அம்மாவுடன் இணைந்து திண்டுக்கலில் காந்தி கிராமத்தை நிறுவினார். காந்தியின் சீடர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜி. ராமச்சந்திரன் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையில் 1904-ல் பிறந்தார். டி.வி. சுந்தரம் அய்யங்காரின் மகளான டி.எஸ். செளந்தரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விதவை மறுமணம், சாதிஒழிப்புமணம், மொழி, மாநிலம் கடந்து என அனைத்து வகையிலும் சீர்திருத்த மணமாக காந்தியின் ஆசியோடு இருவரின் திருமணம் நடந்தது.
சமூக செயல்பாடுகள்
ஜி. ராமச்சந்திரன் காந்தியின் சீடர். கிராமப்பகுதிகளில் காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அரிஜன சேவை சங்கத்தைச் சேர்ந்தவர். டி.எஸ். சௌந்தரத்துடன் இணைந்து ஜி. இராமச்சந்திரன், திண்டுக்கல் மாவட்டத்தின் சின்னாளப்பட்டி அருகமைந்த காந்திகிராமத்தில் 1947-ல் காந்தி கிராம அறக்கட்டளையை நிறுவினர். இவ்வறக்கட்டளை மூலம் கிராமப்புற மக்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவச் சேவைகளை வழங்க பல சமூக சேவை நிறுவனங்கள் துவக்கப்பட்டது. அவைகளில் முதன்மையானது காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம். காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் நிறுவிய ஜி. இராமச்சந்திரன், அதன் நிறுவனத் துணைவேந்தராக டிசம்பர் 9, 1976 முதல் டிசம்பர் 8, 1979 வரை பதவி வகித்தார். ஜி. ராமச்சந்திரன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின்(KVIC) தலைவராகப் பணியாற்றியவர்.
இறப்பு
ஜி. இராமச்சந்திரன் 1995-ல் காலமானார்.
உசாத்துணை
- அறம் வளர்த்த அம்மா: டாக்டர் டி எஸ் சௌந்திரம் வாழ்க்கை வரலாறு: பி.எஸ். சந்திரபிரபு
- மகாத்மா காந்தி முடிவை மாற்றிய புரட்சித் தலைவி: பிச்சைக்காரன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
31-Aug-2023, 06:58:30 IST