under review

சோமநாதபாரதி

From Tamil Wiki
தேவிமான்மியம்

சோமநாதபாரதி (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். தேவிமான்மியம் நூல் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

சோமநாதபாரதி நெல்லை மாவட்டம் இராமேச நல்லூரில் 1845-ல் இராமலிங்க பாகவதருக்கு மகனாகப் பிறந்தார். சிவதாசர் என்றும் அழைக்கப்பட்டார். சிவ பக்தர்.

இலக்கிய வாழ்க்கை

திருச்செந்தின் முருகன் மீது இசைப்பாடல்கள் பல பாடினார். இசைப்பாடல்களும் விருத்தப்பாடல்களும் அமைந்த தேவி மான்மியம் எனும் நூலை இயற்றினார்.

பாடல்

பரம்சிவன் உமையாந் தேவி பங்கெனம் பெருமா னாதி
அரனுரை கயிலைக் கேகும் ஆனந்த முனிவ ரெல்லாம்
வரமுனி ஒருவன் வாழும் வண்மையாச் சிரமங் கொண்டு
வரமிகும் அவனைக் காண்போம் வருமென உடன் சென்றாரே

நூல் பட்டியல்

  • தேவி மான்மியம்

உசாத்துணை


✅Finalised Page