under review

செளந்தர்யலகரி

From Tamil Wiki

செளந்தர்யலகரி (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) வீரை கவிராச பண்டிதர் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்த நூல்.

நூல் பற்றி

பொ.யு. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் அம்பிகையைப் புகழ்ந்து வடமொழியில் ஒரு நூல் எழுதினார். அது நூறு ஸ்லோகங்களைக் கொண்டது. அம்பிகையின் அருளைப் புகழும் முதல் நாற்பது ஸ்லோகங்கள் ஆனந்தலகரி என்றழைக்கப்பட்டன. அடுத்த அறுபது ஸ்லோகங்கள் அம்பிகையின் அழகைப் புகழ்வன. அது சௌந்தரியலகரி(அழகு வெள்ளம்) என்றழைக்கப்பட்டது. இதனை மொழிபெயர்த்து பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரை கவிராச பண்டிதர் தமிழில் எழுதினார். சைவ எல்லப்ப நாவலர் என்பர் இவர் காலத்திலேயே இந்த நூலுக்கு ஒரு உரையும் எழுதினார். சௌந்தரிய லகரி மகளிரை வசப்படுத்த உதவும் எனச் சிலர் நம்பினர்.

உள்ளடக்கம்

  • பாயிரம்
  • ஆனந்தலகரி
  • செளந்தர்யலகரி

பாடல் நடை

சிவமெனும் பொருளும் ஆதி சத்தியொடு
சேரின் எத் தொழிலும் வல்லதாம்
இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது
அரிதெனா மறை இசைக்குமால்
தவபெரும் புவனம் எவ் வகைத் தொழில்
நடத்தி யாவரும் வழுத்து தாள்
அவனியின் கண் ஒரு தவமிலார் பணியல்
ஆவதோ பரவல் ஆவதோ

இணைப்புகள்


✅Finalised Page