under review

செலவு(வெட்சித் திணை)

From Tamil Wiki

செலவு வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. வெட்சி மறவர்கள் ஆநிரை கவரச் செல்வது செலவு எனப்பட்டது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வேற்று நாட்டின் ஆநிரைகளைக் கவர கட்டைக் கடந்து செல்வது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வில் ஏர் உழவர் வேற்றுப் புலம் உன்னிக்
கல் ஏர் கானம் கடந்து சென்றன்று (1.8)

வெண்பா

கூற்று இனைத்து அன்னார் கொடுவில் வலன் ஏந்திப்
பாற்று இனம் பின் படர முன்படர்ந்து - ஏற்றினம்
நின்ற நிலை கருதி ஏகினார் நீள் கழைய
குன்றம் கொடு வில்லவர் (5)

பொருள்: கூற்றின் கூட்டம் போலத் திரண்டிருந்த வெட்சி மறவர்கள், வளைந்த வில்லினை இடப்பக்கத்திற் கொண்டவராகக் கழுகும் பருந்தும் பின்தொடர வளைந்த வில்லுடன் பகைவரது ஆநிரைகளை நோக்கி நீண்ட மூங்கில்களையுடைய குன்றினை நோக்கிச் சென்றனர்.

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 18:18:05 IST