under review

செம்மொழித் தமிழ் விருதுகள் – குறள்பீட விருது

From Tamil Wiki

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செம்மொழித் தமிழ்த் திட்டத்தின் சார்பில், தகுதியுள்ள அறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று குறள்பீட விருது.

குறள்பீட விருது

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் ஆய்வுக்கும் தொண்டாற்றி வரும் தகுதியுள்ள தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் குறள் பீட விருதினை வழங்குகிறது. அயல்நாடு வாழ் தமிழறிஞர்களுக்கு இவ்விருது அளிக்கப்படுகிறது.

மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் ரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியன இவ்விருதினுள் அடங்கும். இவ்விருதுகள் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது.

குறள்பீட விருது பெற்றவர்கள்

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 2005-2006 விருது வழங்கப்படவில்லை
2 2006-2007 முனைவர் ஜார்ஜ் எல். ஹார்ட்
3 2007-2008 விருது வழங்கப்படவில்லை
4 2008-2009 பேராசிரியர் பிரான்சிஸ் குரோ
5 2009-2010 பேராசிரியர் ஐர்ஸ்லெவ் வாசெக்
6 2010-2011 பேராசிரியர் ஜான் ரால்டன் மார்
7 2011-2012 முனைவர் ஈவா மரியா வில்டன்
8 2012-2013 விருது வழங்கப்படவில்லை
9 2013-2014 விருது வழங்கப்படவில்லை
10 2014-2015 விருது வழங்கப்படவில்லை
11 2015-2016 விருது வழங்கப்படவில்லை

உசாத்துணை


✅Finalised Page