under review

செம்மண் கூட்டம்

From Tamil Wiki

செம்மண் கூட்டம் (செம்பன் கூட்டம், செம்பான் கூட்டம். செம்மண் குலம். செம்பன் குலம்). கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியில் அறுபது உட்பிரிவுகளில் ஒன்று. செம்பன் என்பது சிவந்தவன் என்று பொருள். செம்மண் நாட்டைச் சேர்ந்தவன் என்றும் கொள்ளலாம். செம்பியன் என்ற சோழர்குடிப்பெயர்களில் ஒன்று இவர்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் இருக்கலாம்.

(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

வரலாறு

இவர்களது முதற்காணி பொங்கலூர் நாடு. 'செம்பியன்' என்ற பட்டம் பெற்றனர். செம்பியன் என்ற சோழர்களின் சிறப்புப் பெயர் இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். "செம்பையூர்ச் செம்பன் கும்பலில் யானும் கூட்டென வரவே, செம்பன் காவலியர் செருக்கினை அடக்கித் தம்பணன் செம்பைத் தவத்தினிலிருந்தான்" என்று கொங்குமண்டலக் குறவஞ்சி கூறுகிறது.. தொடுவாய்ப் போரில் ஓதாளன் , பொன்னர், சாத்தந்தை , குழையர் ,செம்பன் ஆகிய ஐந்து கவுண்டர்களும் சோழனிடம் பரிசு பெற்றனர் எனப்படுகிறது.

இவர்களது முதற்காணி , குளித்தலை வட்டத்து செம்பாபுரி. பின்னர் பொங்கலூர் நாட்டிலும் இதே பெயரில் ஊரை அமைத்தனர். செம்பாதவரி , செம்பாபுரி அம்மன் செம்பாக் காளியம்மன் இவர்களின் தெய்வங்கள் .

ஊர்கள், தெய்வங்கள்

காங்கேய நாட்டு பரஞ்சேர்வழி, கோவை கீரனம், மாதம்பட்டி , நாமக்கல் வட்டம் , மணலி ஆகிய இடங்களில் காணி கொண்டு கரியகாளியம்மனை வைத்து வழிபட்டு வருகின்றனர் . சிலர் அவினாசி அப்பரையும் , காஞ்சிக் கோயில் சீதேவி அம்மனையும் வணங்கி வருகின்றனர். பூந்துறை கருமலையாண்டவனும், நசியனூர் மதுரகாளியம்மனும் கூட இவர்களின் தெய்வங்களாகும் . கரூர் , திருவெழுந்தூர்,பரஞ்சேர்வழி, புலியூர், செம்பை முசிறி , குளித்தலை ஆகிய இடங்களையும் காணியுரிமை பெற்றுள்ளனர்.

உசாத்துணை


✅Finalised Page