under review

சு. ஆறுமுகம்

From Tamil Wiki

சு. ஆறுமுகம் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். இவர் எழுதிய திரிகோணமலை அந்தாதி முக்கியமான சிற்றிலக்கிய நூலாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள திரிகோணமலையில் சிதம்பரநாதர் சுப்பிரமணியனாருக்கு பொ யு 19-ம் நூற்றாண்டில் பிறந்தார்.

திருக்கோணேசர் ஆலயம்

இலக்கிய வாழ்க்கை

சு. ஆறுமுகம் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான அந்தாதியில் திருக்கோணேசரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திரிகோணமலை அந்தாதி பாடினார். 1886-ல் பாடி முடிக்கப்பட்டது. 1990-ல் கொழும்பு இந்து கலாசார அமைச்சினால் மீள் பதிப்பிக்கப்பட்டது.

நூல்கள் பட்டியல்

அந்தாதி
  • திரிகோணமலை அந்தாதி 1886

உசாத்துணை


✅Finalised Page