சுஷ்மிதா பானர்ஜி

From Tamil Wiki
சுஷ்மிதா பானர்ஜி

சுஷ்மிதா பானர்ஜி (Sushmita Banerjee) ஒரு எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியின் போது அங்கே ஆப்கன் மக்களிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், தனது திருமண வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டு ‘காபூலி வாலாவின் வங்காள மனைவி’ (1997) என்ற நூலின் மூலம் அறியப்படுகிறார்.

2013-ம் ஆண்டு இவருடைய 49 வது வயதில், ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் உள்ள இவரது வீட்டிற்கு வெளியே 4-ம் தேதி இரவு அல்லது 5ம் தேதி அதிகாலையில் தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.