under review

சுயம்பு லிங்கம்

From Tamil Wiki
சதீஸ்கர் மாநிலம் க்ரியாபாந்த் மாவட்டம் மதுராவில் உள்ள பூதேஷ்வர் நாத்

சுயம்பு லிங்கம்: பூமியில் தானாகத் தோன்றி வளர்ந்த லிங்கம் வகை. சுயம்பு லிங்கம் லிங்கங்களில் புனிதமானது எனக் கருதப்படுகிறது.

லிங்க அமைப்பு

Suyambulingam1.jpg
அமராவதி குகையில் உள்ள பனி லிங்கம்

சுயம்பு லிங்கத்திற்கு வடிவும், அளவும் ஆகம விதிப்படி கிடையாது. சுயம்பு லிங்கத்தில் சிரோவர்த்தனம்[1], லட்சணோத்தாரம்[2] காணப்படாது. இது பூமியில் தன்னியல்பாக தோன்றி வளர்ந்த லிங்கம் என காமிகாகமம் குறிப்பிடுகிறது.

ஆகமம்

நடராஜர் சடையை விரித்து ஆடிய போது அதிலிருந்த கங்கையின் நீர்த்துளிகள் பூமியில் சிதறி விழுந்தது. இவ்வாறு விழுந்த நீர்த்துளிகள் சுயம்பு லிங்கமானது என பாரமேசுர ஆகமம் குறிப்பிடுகிறது.

மண்ணிலுள்ள ஆதிசேஷனது பல தலைகள் ஒரு முறை அசைந்ததால் ருத்திரனின் கோபக் கனலிலிருந்து மூன்று தீப்பொறிகள் உண்டாயின. அவை மூன்று சிவலிங்கமாக மாறின.

  • நிர்மூலலிங்கம் - நீரினுள் இருப்பது
  • சமூலலிங்கம் - மண் மலையை ஆதாரமாகக் கொண்டது
  • பிரித்விலிங்கம் - மண்ணை ஆதாரமாகக் கொண்டது

என காமிகாகமம் குறிப்பிடுகிறது.

காரணாகமம், வாதுளாகமம், சூக்குமாகமம், சுப்ரபேதாகமம் என மொத்தம் சுயம்புலிங்கம் பற்றிக் கூறும் பத்து ஆகமங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் சுயம்பு லிங்கம்

தமிழ்நாட்டில், திருவொற்றியூர் (பக்தநாதர்), திருவாரூர் (வன்மீகநாதர்), திருவையாறு (செம்பொற்சோதியார்) போன்ற இடங்களில் சுயம்பு லிங்கங்கள் காணப்படுகின்றன. இந்த லிங்கங்களுக்கு திருமுழுக்காட்டு நீரால் நிகழ்த்தப்படுவதில்லை. பண்டிகை நாட்களில் சாம்பிராணித் தைலம், புனுகுச் சட்டம், நெய்பசை ஆகியன கொண்டு லிங்கத்தின் மேல் மேற்பூச்சு இடப்படும்.

சுயம்பு லிங்க தலங்கள்

திருநிகமக்ஞான சிவாச்சாரியார் இயற்றிய ’சீர்கோணத்தாரதசகம்’ என்னும் வடமொழி நூலின் படி மொத்தம் அறுபத்தி எட்டு சுயம்பு லிங்க தலங்கள் உள்ளன. இந்நூல் கந்தகாலோத்தராகமம் படி இயற்றப்பட்டது. அவற்றின் பட்டியில்,

தலங்களின் பெயர் லிங்கத்தின் பெயர்
1 வாரணாசி மகாதேவர்
2 பிரயாகை மகாதேவர்
3 நைமீசம் தேவதேவேசர்
4 கயா பிரபிதாமகர்
5 குருஷேத்திரம் தாணுநாயகர்
6 பிரகாசம் சசிபூடணர்
7 புட்கரம் அசோகந்தர்
8 விமலேச்சுவரம் விசுவேசர்
9 அட்டகாசம் மகாநாதர்
10 மயேந்திரம் மகாவரதர்
11 உஜ்ஜைனி மகாகாளர்
12 மகோகோடம் மதோத்கடர்
13 சங்குகர்ணம் மகாதேவர்
14 கோகர்ணம் மகாபலர்
15 உருத்திரகோடி மகாயோகீஸ்சுரவர்
16 தலேஸ்வரம் மகாலிங்கமூர்த்தி
17 கேதாரம் ஈசானர்
18 இமயம் உருத்திரருத்ரர்
19 சுவர்ணாட்சம் சகத்திராட்சர்
20 விஸ்வேசம் வருடபத்வசர்
21 பைரவம் பைரவேசர்
22 பத்ராவடம் பத்ரர்
23 கநகரம் உருத்திரர்
24 பத்ரகர்ணம் சதாசிவர்
25 தேவதாருவனம் தண்டீரர்
26 குருசாங்கலம் சண்டீசர்
27 திருசேந்தி ஊர்த்தவதேரர்
28 சாங்கலம் கபர்த்தீசுவரர்
29 ஏகாக்ரம் கிருத்திவாசர்
30 அமர்தகேஸ்வரம் சூட்சமர்
31 காளஞ்சரம் நீலகண்டர்
32 விமலேஸ்வரம் சீகண்டர்
33 தியனேஸ்வரம் சித்தேஸ்வரர்
34 காயத்ரி முத்தேஸ்வரர்
35 காஷ்மீர் விஜயர்
36 மகுடேஸ்வரம் சயந்தர்
37 கிருதேஸ்வரம் பச்மகாயர்
38 கயிலாயம் கிராதர்
39 விருடதானம் இமயலிங்கேஸ்வரர்
40 கரவீரம் கபாலீசர்
41 த்ருசந்தி த்ருயம்பகர்
42 விரசை திருலோசனர்
43 தீப்தம் மகேஸ்வரர்
44 நேபாளம் பசுபதீஸ்வரர்
45 காரோகணம் வருணீசர்
46 அம்பிகாநகரம் உமாபதீசர்
47 கங்காசர்ஸ் அமரநாதர்
48 மகேஸ்வரம் ஓங்காரேஸ்வரர்
49 அரிசந்திரம் அப்திநாதர்
50 குருக்கேத்திரம் சங்கரர்
51 வாமேஸ்வரம் சடிலர்
52 மகுடேஸ்வரம் சௌமியர்
53 சப்தகோதாவரி பீமர்
54 நாகேஸ்வரம் சுயம்புவர்
55 சல்பேஸ்வரம் த்ருசூலியர்
56 சிவசைலம் திரிபுராந்தகர்
57 கர்ணிகாரோகணம் அத்யட்சர்
58 கயிலாயம் கணநாயகர்
59 ஏமகூடம் விருபாட்சர்
60 கந்தமாதனம் பூர்பவர்
61 இமத்தானம் கங்காதரர்
62 படபாமுகம் அனலேஸ்வரர்
63 விந்தியமலையில் வராகேஸ்வரர்
64 கோடிவடம் உக்கிரர்
65 இட்டிகாபுரம் வரிட்டர்
66 இலங்கை ஊர்த்தவகேசர்
67 பாதாளேஸ்வரம் ஆடகேஸ்வரர்
68 லிங்கேஸ்வரம் வரதர்
69 கசப்ரியம் சலலிங்கேசர்

உசாத்துணை

  • சிவவடிவங்கள், மா. சிவகுருநாதப் பிள்ளை
  • Elements of Hindu Iconography, Volume II, Part I, T.A. Gopinatha Rao

அடிக்குறிப்புகள்

  1. உச்சி அமைப்பு
  2. முக அமைப்பு


✅Finalised Page