சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி
- சுங்கை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுங்கை (பெயர் பட்டியல்)
தேசிய வகை சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் பதிவு எண் BBD 5058.
வரலாறு
சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 1937-ம் ஆண்டு சுங்கை சோ தோட்ட நிர்வாகத்தினரால் தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கக்காலத்தில் சுங்கை சோ தோட்ட அலுவலகத்திற்கு அருகில் இரண்டு அறைகளைக் கொண்ட சிறிய கட்டிடத்தில் சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி இயங்கியது. பள்ளியின் முதல் தலைமையாசிரியர் சாமுவேல்(Samuel).
வளர்ச்சி
துவக்கத்தில் இரு அறைகளைக் கொண்ட பழைய கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி கற்றனர். 1967-ம் ஆண்டு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்ததால், வகுப்பறை பற்றாக்குறையைக் களைய அரசாங்கத்தால் எல்லா வசதிகளும் அடங்கிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தரப்பட்டது.
1986-ம் ஆண்டு இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட இணைக்கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. 1990-ம் ஆண்டில் சுங்கை சோ தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நலனுக்காக இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட மற்றொரு இணைக்கட்டம் தேசிய நில நிதிக்கூட்டுறவுச் சங்கத்தால் கட்டித் தரப்பட்டது. தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் ஆதரவினால் பள்ளியில் மேலும் பத்து வகுப்பறைகளைக் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. பள்ளியின் பாலர் பள்ளியும் சிறப்பாக இயங்குகின்றது.
இன்றைய நிலை
சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி போதிய வசதிகளுடனும் பல வளர்ச்சிகளுடனும் இயங்கி வருகின்றது. கல்வி, இணைப்பாடம் எனச் சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி சிறந்து விளங்குகின்றது.
உசாத்துணை
- க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
- மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 18:43:50 IST