under review

சி. சின்னத்தம்பிப்புலவர்

From Tamil Wiki

To read the article in English: S. Chinnathambi Pulavar. ‎

சி. சின்னத்தம்பிப்புலவர் (பதினெட்டாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சி. சின்னத்தம்பிப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் இணுவில்லில் 1745-ல் பிறந்தார். தந்தை சிதம்பரநாதர். ஒல்லாந்த அரசினரிடம் சாதனம் எழுதும் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

கவி பாடும் திறமை பெற்றிருந்தார். நகர் காவலர் கையில் அகப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டாரென்றும், அப்போது சிவகாமசுந்தரியம்மைமீது ஒரு பதிகம் பாடி விடுதலை அடைந்தார் என நம்பப்படுகிறது. நாடக நூல்கள் எழுதினார். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

நூல் பட்டியல்

  • பஞ்சவர்ணத் தூது
  • நொண்டி நாடகம்
  • அநுருத்திர நாடகம்
  • கோவலன் நாடகம்
  • இணுவிற் சிவகாமியம்மை திருவூஞ்சல்
  • இரட்டைமணிமாலை
  • சதகம்

உசாத்துணை


✅Finalised Page