under review

சி.தா. அமிர்தலிங்கம்பிள்ளை

From Tamil Wiki

சி.தா. அமிர்தலிங்கம்பிள்ளை (19-ம் நூற்றாண்டு) தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்பாணத்தைச் சேர்ந்த சி.வை. தாமோதரம்பிள்ளைக்கு மகனாக பத்தொன்பதாவது நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்தார். சி.வை. தாமோதம்பிள்ளைக்கு மூன்று மனைவியர் மற்றும் பத்து குழந்தைகள். அவர்களில் எட்டு குழந்தைகள் அவர் உயிருடம் இருக்கும்போதே இறந்துவிட்டனர். எஞ்சிய இருவர் அமிர்தலிங்கம்பிள்ளை மற்றும் அழகுசுந்தரம். அழகுசுந்தரம் கிறுஸ்தவ மதத்திற்கு மாறியதால் அவரை இறுதிவரை தாமோதரன்பிள்ளை சேர்த்துக் கொள்ளவில்லை. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

பிள்ளைத்தமிழ் மற்றும் மாலை என்ற சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடியுள்ளார். சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர்.

நூல்கள் பட்டியல்

பிள்ளைத்தமிழ்
  • சாலை விநாயகர் பிள்ளைத் தமிழ்
மாலை
  • தணிகேசர் மாலை (1881)

உசாத்துணை


✅Finalised Page