under review

சி.ஆ. ராமசாமிப்பிள்ளை

From Tamil Wiki
சி.ஆ. ராமசாமிப்பிள்ளை

சி.ஆ. ராமசாமிப்பிள்ளை (1898-1968) தமிழ்க்கவிஞர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சி.ஆ. ராமசாமிபிள்ளை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கரிவலம்வந்தநல்லூரில் 1898-ல் பிறந்தார். பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை சேத்தூர் அரசவைக் கவிஞர் அப்பாவுக் கவிராயரிடம் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சி.ஆ. ராமசாமிபிள்ளை கரிவலம்வந்தநல்லூரில் கோயில்கொண்ட பால்வண்ணநாதர் மீது அந்தாதி, கலிவெண்பா, மாலை முதலிய பிரபந்த நூல்கள் பாடினார்.

மறைவு

சி.ஆ. ராமசாமிப்பிள்ளை 1968-ல் காலமானார்.

பாடல் நடை

  • முகலிங்க வெண்பா அந்தாதி

கண்ணே கருத்தெ கதிகாணு மெய்தவத்தோர்
எண்ணே எழுத்தே யிறைவனே - நண்ணுந்
தவத்தால் உடல்வருந்தேன் சத்கருமஞ் செய்யேன்
அவத்தானே னுய்யு வதெவ் வாறு

நூல் பட்டியல்

  • திருக்கருவை முகலிங்க வெண்பா அந்தாதி
  • திருக்கருவை பால்வண்ணத்தந்தாதி
  • திருக்கருவை நீரோட்டக வெண்பா அந்தாதி
  • கருவை நாயகமாலை
  • திருக்கருவை வருக்கமாலை
  • திருக்கருவை இரட்டை மணிமாலை
  • திருக்கருவை பால்வண்ணப்பத்து
  • திருக்கருவை ஒப்பனையம்மன் வருகைப்பத்து
  • திருக்கருவை ஒப்பிலா வல்லியம்மன் பத்து
  • திருக்கருவை முப்பிடாதியம்மன் பத்து
  • திருக்கருவை வீரசண்முகர் வருக்கச் சமயமாலை
  • திருக்கருவை வீரசண்முகர் வாழ்த்துப் பாமாலை
  • திருக்கருவை தலபுராண போற்றிக் கலிவெண்பா

உசாத்துணை


✅Finalised Page