under review

சிவானந்தஜோதி

From Tamil Wiki
சிவானந்தஜோதி (ஞானசுரியம்)

சிவானந்தஜோதி (ஞானசூரியர்) (பிறப்பு: ஆகஸ்ட் 6, 1961)ஈழத்துப் பெண் எழுத்தாளர், சைவ சமய சொற்பொழிவாளர். சைவm சார்ந்த கட்டுரைகள் எழுதினார். சைவ ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவானந்தஜோதி இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அருளானந்தம், தேவகி இணையருக்கு ஆகஸ்ட் 6, 1961-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்தியக் கல்லூரியில் கற்றார். கல்முனை வெஸ்லி கல்லூரியில் உயர்கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி பட்டம் பெற்றார்.

சைவசமய சொற்பொழிவு

சிவானந்தஜோதி அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்படும் சைவபுலவர் பரீட்சையில் தேர்ச்சி பெற்றார். சைவ ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். பல மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

விருதுகள்

  • சைவச்செம்மல் (பெரியபுராண ஆராய்ச்சி மாநாடு புதுச்சேரி)
  • சர்வதேச மகளிர் தின துறைசார் சாதனையாளர் (ஜனாதிபதி விருது 2011)
  • மட்டக்களப்பு நகர சாதனையாளர் 2013 (மட்டக்களப்பு மாநகரசபை)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jun-2024, 14:25:38 IST