சிவரமணி இராசரத்தினம்
From Tamil Wiki
- ராசரத்தினம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராசரத்தினம் (பெயர் பட்டியல்)
- சிவரமணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிவரமணி (பெயர் பட்டியல்)
சிவரமணி இராசரத்தினம் (பிறப்பு: நவம்பர் 6, 1972) ஈழத்து தமிழ்க் கவிஞர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவரமணி இலங்கை யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இராசரத்தினம், சிவஞானவதி இணையருக்கு நவம்பர் 6, 1972-ல் பிறந்தார். யாழ் மீசாலை வீரசிங்கம் மாகவித்தியாலயம், கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம் ஆகிய பள்ளிகளில் பள்ளிக்கல்வி பயின்றார். உடன்பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. திருகோணமலையில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
சிவரமணியின் படைப்புகள் பல இதழ்களில் வெளிவந்தன. தொடுவானில் சிதறல்கள் என்னும் கவிதை நூலை 2015-ல் வெளியிட்டார். தனித்தீவு எனும் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார்.
விருதுகள்
- முகநூல் மூலம் இயங்கும் முதன்மையான பல அமைப்புக்கள் மற்றும் இலங்கையின் தடாகம் கலை இலக்கிய வட்டம், உலகப்பாவலர் மன்றம் வழங்கிய 25 விருதுகளை சிவரமணி இராசரத்தினம் பெற்றார்.
- தடாகம் கலை இலக்கியப் போட்டியில் இவரது கவித்தீபம் என்ற கவிதைத்தொகுப்பு இரண்டாமிடத்தை பெற்றது.
நூல்கள் பட்டியல்
கவிதைத்தொகுப்பு
- கவித்தீபம்
- தொடுவானில் சிதறல்கள்
- தனித்தீவு
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Mar-2023, 18:44:16 IST