under review

சிவபாக்கியம் வேலுப்பிள்ளை

From Tamil Wiki

சிவபாக்கியம் வேலுப்பிள்ளை (பிறப்பு: ஏப்ரல் 1, 1970) எழுத்தாளர், சமூகசேவையாளர். கவிதை, கதை, கட்டுரைகள் எழுதினார். பெண்கள் முன்னேற்றம் தொடர்பான பயிற்சிகளை அளித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவபாக்கியம் வேலுப்பிள்ளை இலங்கை அம்பாறை மாவட்டத்தின் கருங்கொடித்தீவில் வேலுப்பிள்ளை, காரணிப்பிள்ளை இணையருக்கு ஏப்ரல் 1, 1970-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை கோலாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் கற்றார். இயற்கை முறை விவசாயம் தொடர்பான பயிற்சியை இந்தியாவுக்குச் சென்று முடித்தார்.

அமைப்புப் பணிகள்

  • மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம் போன்றவற்றின் வழியாக பெண்கள் சார்ந்த பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தார்.
  • பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கத்தின் உபதலைவியாகவும் பெண்கள் சுயமேம்பாடு தொடர்பான பயிற்சிகளுக்கு பெண்களை ஒன்றிணைக்கும் செயல்பாடுகளையும் மேற்கொண்டார்.
  • இயற்கை முறை விவசாயம் தொடர்பான பயிற்சியை இலங்கையில் உள்ள பெண்களுக்கு வழங்கி, நுண்கடனில் இருந்து பெண்கள் விடுபடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
  • பெண்ணியவாதியான இவர் பல பெண்கள் அமைப்புக்களில் இணைந்து செயல்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சிவபாக்கியம் வேலுப்பிள்ளை பள்ளியில் பயிலும் போது கவிதை, கட்டுரை, சிறுகதைகள் மற்றும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளை எழுதினார். இவரின் ஆக்கங்கள் 'பெண்' சஞ்சிகை, 'உதயசூரியன்' நாளிதழ் போன்றவற்றில் வெளிவந்தன. பெண்ணியவாதியான இவர் பல பெண்கள் அமைப்புக்களில் இணைந்து செயல்பட்டார்.

உசாத்துணை


✅Finalised Page