சிவசுப்பிரமணிய தேசிகர்
சிவசுப்பிரமணிய தேசிகர் (பொ.யு.19-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கை குறிப்பு
சிவசுப்பிரமணிய தேசிகர் மதுரையில் 19-ம் நூற்றாண்டில் பிறந்து வாழ்ந்தவர். பள்ளிக்கல்வி பயின்று முடித்து சிலகாலம் இல்லறத்தில் ஈடுப்பட்டு வாழ்ந்துள்ளார். பின்னர் ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாக இல்லறம் நீங்கி துறவறம் மேற்கொண்டார்.
ஆன்மீக வாழ்க்கை
சிவசுப்பிரமணிய தேசிகர் விருத்தாசலத்தில் வாழ்ந்த சிவசிதம்பர தேசிகரை தனது ஆன்மீக குருவாக ஏற்றார். அவரது மாணவராக தொண்டு செய்து வாழ்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சிவசுப்பிரமணிய தேசிகர் செய்யுள் இயற்றுவதில் புலமை பெற்றிருந்தார். சிவசிதம்பர தேசிகருக்கு மாணவராக இருந்தபடி 'சுபோதசிகாமணி', 'கழநிவாசல் திருவருணாசல தேசிகாத்நப்பிள்ளைத் தமிழ்', 'ழகாபுரி உமையவள் ஆனந்தப்பிள்ளைத் தமிழ்', 'மரகத முத்து மாணிக்கத் திருப்புகழ்', 'இராயபுரம் பதிற்றுப்பத்தாந்தாதி', 'சிவசுப்பிரமணிய தேசிகர் சரணப் பதிகம்' ஆகிய நூல்களை எழுதினார்.
நூல் பட்டியல்
- சுபோதசிகாமணி
- கழநிவாசல் திருவருணாசல தேசிகாத்நப்பிள்ளைத் தமிழ்
- அழகாபுரி உமையவள் ஆனந்தப்பிள்ளைத் தமிழ்
- மரகத முத்து மாணிக்க திருபுகழ்
- இராயபுரம் பதிற்றுப்பத்தாந்தாதி
- சிவசுப்பிரமணிய தேசிகர் சரண பதிகம்
பாடல் நடை
வளைந்தாட விலமணி மேகலை யாடக்கங்கணம் மிளிர்பரி புரமாட
விரை செறி மஞ்சரி யாடுற மரகத மேனி குழைந்தாட
அலகறு புவனச ரசார மாடிட ஆடுக செங்கீரை
அணிவள மிகுமழ காபுரி உமையவள் ஆடுக செங்கீரை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jul-2025, 11:02:28 IST