under review

சிற்றம்பலமுதலியார்

From Tamil Wiki

சிற்றம்பலமுதலியார் (பொ.யு. 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ்ப்புலவர், ஜோதிட சாஸ்திரம் பயின்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிற்றம்பலமுதலியார் சைதாபுரத்திலே இருந்த ஆண்டியப்ப முதலியாரின் பேரன். சுவாமி முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் உமாபதி முதலியார், பொன்னம்பல முதலியார். காயை முருகலிங்கையர் இவரது தமிழாசிரியர். சிற்றம்பலமுதலியார் ஜோதிட சாஸ்திரத்தில் தேர்ச்சி கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

சிற்றம்பலமுதலியார் 'ஐயாசுவாமீயம்' என்ற ஜோதிடக் கிரந்தம் ஒன்றை எழுதினார். இதில் காப்பும் வாழ்த்தும் நீங்கலாக 105 வெண்பாக்கள் உள்ளன. தந்தையின் வேண்டுகோளுக்கு இசைந்து இந்த ஜோதிட நூலை இவர் எழுதினார். அந்நூலைப் புகழ்ந்து காயை முருகலிங்கையர், இராமாநுசக் கவிராயர், சென்னை நயனப்ப முதலியார் போன்றோர் புகழ்க்கவி எழுதினர். 'அம்மணியம்' என்னும் பாடலையும் இவர் இயற்றினர்.

பாடல் நடை

  • ஐயாசாமீயம் அவையடக்க வெண்பா

ஆர்ந்தறிவோர் முன்னேயா னையாச் சுவாமீயந்
தேர்ந்தபுன்சொல் வெண்பாவிற் செப்பவே-சேர்ந்தநீர்ச்
சேற்றில் விளைந்தநறுஞ் செங்கழுநீர்ப் புஷ்பமென
மாற்றிநல மாக்கொள்ளு வார்

நூல் பட்டியல்

உசாத்துணை


✅Finalised Page