under review

சிற்றம்பலப் புலவர்

From Tamil Wiki

சிற்றம்பலப் புலவர் (18-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கண்டிகை அரசன் மீது பாடிய கிள்ளைவிடு தூது முக்கியமான படைப்பாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் மதகலில் 18-ம் நூற்றாண்டில் மாதகல் என்னும் ஊரில் வேளாண் குலத்தில் பிறந்தார். தமிழ் நாட்டில் வேதாரணியத்துக்குச் சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயர் என்னும் அறிஞரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். இவருடைய மாணவர்கள் இருபாலை சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை முதலியோர். .

இவர் கண்டி அரசன் ஸ்ரீவிக்ரமராஜசிங்கன் மேல் கிள்ளைவிடு தூது என்று ஒரு பிரபந்தம் பாடி அதை அரங்கேற்றற்காகக் கண்டி சென்ற பொழுது வழியில் அவ்வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப் பட்டான் என்ற சொற்கேட்டு அரங்கேற்றம் செய்யாமல் தம்மூர்க்குத் திரும்பினார் .

நூல்கள்

தூது
  • கண்டி அரசன் கிள்ளை விடுதூது

உசாத்துணை


✅Finalised Page