under review

சின்னக்குட்டிப் புலவர்

From Tamil Wiki

சின்னக்குட்டிப் புலவர் (பொ.யு. பதினெட்டாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்னக்குட்டிப் புலவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மாவிட்டபுரத்தில் பிறந்தார். மாதகல் சிற்றம்பலப் புலவரிடம் கல்வி பயின்றார். தமிழ்நாட்டில் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டைச் சேர்ந்த கணபதி குருக்களிடம் தமிழ் இலக்கணம் கற்றார். தெல்லிப்பிழை கனகராய முதலியாரின் அலுவல் உதவியாளராகவும், அவரது மகன் கந்தப்பனுக்கு ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தண்டிகைக் கனகராயன் பள்ளு

இலக்கிய வாழ்க்கை

தெல்லிப்பழையிலிருந்த கனக தண்டிகைக் கனகராய முதலியார் பற்றி ’தண்டிகைக் கனகராயன் பள்ளு' என்ற பள்ளு நூலை 1792-ல் எழுதினார். இந்நூலை தெல்லிப்பிழை வழக்கறிஞர் வ. குமாரசுவாமிப் பிள்ளை விளக்கக் குறிப்புக்களுடன் 1932-ல் அச்சில் பதிப்பித்தார்.

நூல் பட்டியல்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page