under review

சிந்துஜா சத்தியசீலன்

From Tamil Wiki
சிந்துஜா சத்தியசீலன்

சிந்துஜா சத்தியசீலன் (SJ Sindu) (பிறப்பு: நவம்பர் 27, 1987) ஈழத்துப் பெண் எழுத்தாளர். புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கிறார். ஆசிரியர். ஆங்கிலத்தில் நாவல்கள், சிறுகதைகள் எழுதிவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சிந்துஜா சத்தியசீலன் இலங்கையில் பிறந்தார். அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் வசிக்கிறார். இளங்கலைமாணியை நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் கற்றார். நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுமாணி பட்டம் பெற்றார். புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் கலாநிதிப்பட்டம்(பி.எச்.டி) பெற்றார்.

ஆசிரியப்பணி

சிந்துஜா டொராண்டோ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். புனைகதை எழுதுதல், கலப்பின வகைகள், வினோதமான ஆய்வுகள், திருநங்கைகள் தொடர்பான ஆய்வுகள், பிந்தைய காலனித்துவ ஆய்வுகள், பெண்ணிய ஆய்வுகள், இலங்கை புலம்பெயர்ந்தோரின் இலக்கியம் போன்றவற்றைக் கற்பித்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிந்துவின் முதல் நாவலான 'Marriage of a Thousand Lies' 2017-ல் வெளியாது. 'ஐ ஒன்ஸ் மெட் யூ பட் யூ வெர் டெட் '(I Once Met You But You Were Dead) என்ற கலப்பின புனைக்கதை எழுதினார். சிந்துவின் இரண்டாவது நாவலான 'ப்ளூ ஸ்கின்ன்ட் காட்ஸ்' (Blue-Skinned Gods) சோஹோ பதிப்பகத்திலிருந்து 2021-ல் வெளியானது. சிறுகதைகள், கவிதைகள் எழுதிவருகிறார்.

விருதுகள்

  • அறிமுக புனைகதைக்கான பதிப்பக முக்கோண எட்மண்ட் ஒயிட் விருது(Publishing Triangle Edmund White Award)
  • அறிமுக புனைகதைக்கான கோல்டன் கிரவுன் லிட்டரரி சொசைட்டி விருது (Debut Fiction and the Golden Crown Literary Society Award for Debut Fiction)-'Marriage of a Thousand Lies'
  • "Dominant genes' அமெரிக்க நூலக சங்கத்தால் ஸ்டோன்வால் ஹானர் புத்தகமாக (American Library Association as a Stonewall Honor Book) தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • Blue-Skinned Gods - லாம்ப்டா இலக்கிய விருதுக்கான இறுதிச்சுற்றுக்குத் தேர்வானது
  • வி.சி.யு முதல் நாவலாசிரியர் விருது
  • 'Dominant genes' -ஸ்பிளிட் லிப் பிரஸ் டர்ன்பக்கிள் சாப்புக் போட்டியில் (Split Lip Press Turnbuckle Chapbook Contest} வென்றது

நூல் பட்டியல்

நாவல்
  • Marriage of a Thousand Lies (2017)
  • Blue-Skinned Gods
கிராஃபிக் நாவல் =
  • Shakti
  • Tall Water
சிறுகதைத் தொகுப்பு
  • The Goth House Experiment
கலப்பின புனைக்கதை
  • I Once Met You But You Were Dead
  • Dominant Genes

உசாத்துணை


✅Finalised Page