under review

சித்தி பரீதா

From Tamil Wiki

சித்தி பரீதா (சித்தி பரீதா தம்பி சாஹிப்) ஈழத்துப் பெண் எழுத்தாளர். இஸ்லாம் சார்ந்த கட்டுரைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சித்தி பரீதா இலங்கை புத்தளம் சிலாபத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சிலாபம் ரோமன் கத்தோலிக்கத் தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் ஐந்தாம் தரம் முதல் எட்டாம் வகுப்பு வரை சிலாபம் நஸ்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சித்தி பரீதா தன் 63-வது வயது முதல் எழுதினார். 'குர்ஆனின் சுருக்கத்தின் கண்ணோட்டம்' என்ற இவரது முதலாவது கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் 2012-ல் வெளியானது. பல இஸ்லாமிய கட்டுரைகள் தினகரன் பத்திரிகையில் எழுதினார். பத்திரிகையில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து 'இஸ்லாமிய தத்துவ முத்துக்கள்' என்ற பெயரிலும் 'தித்திக்கும் திருமுறையின் மகிமைகள்' என்ற பெயரிலும் இவர் இரண்டு நூல்களை வெளியிட்டார்.

நூல் பட்டியல்

கட்டுரைத் தொகுப்பு
  • இஸ்லாமிய தத்துவ முத்துக்கள்
  • தித்திக்கும் திருமுறையின் மகிமைகள்

உசாத்துணை


✅Finalised Page