under review

சிதம்பர அடிகள்

From Tamil Wiki
சிதம்பர அடிகள்
சிதம்பர அடிகள் சமாதி

சிதம்பர அடிகள் (18-ம் நூற்றாண்டு) போரூர் சிதம்பர அடிகள். வீரசைவ மரபைச் சேர்ந்த பக்திக் கவிஞர். நெஞ்சு விடு தூது, மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா முக்கியமான படைப்புகள்.

வாழ்க்கைக் குறிப்பு

சிதம்பர அடிகள் நிறுவிய முருகன் கோயில்

வீரசைவ மரபைச் சேர்ந்த துறையூர் சாந்தலிங்க அடிகளின் மாணவர். குமாரதேவர் இவருடன் தீக்கை பெற்றார். திருப்போரூரில் அருள்மிகு கந்தசுவாமி கோவிலையும், அருகில் உள்ள ஒரு ஓடையை பெரிய திருக்குளமாகவும் உருவாக்கி அங்கே வாழ்ந்தார். அருகே உள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலை வடிவமைத்தும் இவர் தான்.

வேறு பெயர்கள்
  • சிதம்பரதேவர்
  • சிதம்பர ஸ்வாமிகள்

இலக்கிய வாழ்க்கை

துறையூர் சாந்தலிங்க சுவாமிகள் இயற்றிய வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது போன்ற நூல்களுக்கு உரைநூல்களை எழுதினார். இவரது வாழ்க்கை வரலாறு புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்பவரால் எழுதப்பட்டது. சிற்றிலக்கிய வகைகளைக் கொண்டு பாடல்களை இயற்றினார்.

சமாதி

கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கபாதை அமைத்து அதில் சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது.இவர் பொயு 1659-ம் ஆண்டு வைகாசி மாச விசாக நாளில் சமாதியானார். ஆண்டுதோறும் கண்ணகப்பட்டில் உள்ள அவரது மடத்தில் குருபூஜை விழா நடத்தப்படுகிறது.

நூல் பட்டியல்

உசாத்துணை


✅Finalised Page