under review

சிதம்பரப்பிள்ளை

From Tamil Wiki

சிதம்பரப்பிள்ளை (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிதம்பரப்பிள்ளை சேலத்தைச் சேர்ந்த விசுவலிங்கனின் மகனாகப் பிறந்தார். வீரசைவ சமயத்தைச் சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

சிதம்பரப்பிள்ளை 'கைலாயநாதர் சதகம் பாடினார். இந்நூல் இராசிபுரத்தின் கைலாசநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. காப்பு, வாழி என இரு பாடல்களுடன் 102 பாடல்கள் உள்ளன. இராசிபுரத்தின் வளமையைப் பாடுகின்றது. ஒவ்வொரு பாடலும் பதினான்கு சீர்களைக் கொண்டது.

பாடல் நடை

  • கைலாயநாதர் சதகம்

ஆதிகவி நாலா யிரத்துத் தொளாயிரத்
தாகுமுப் பாணிரண்டி
லாயிரத் தெழுநூற் றைம்பத்து மூன்றுவரு
டஞ்சகாப் தம்விகுர்தியாம்
நீதிசே ராண்டுமே டந்திங்கள் குருவார
நேர்ந்தபனி ரண்டாந்தின
நிறைகன்னி திதியைந்தி னோடமிர்த யோகமிவை
நீடிரே பதிநாளினில்
சாதியினில் வீரசை வன்விசுவ லிங்கன்பர்
தருசிதம் பரவாணன்யான்
சதகமெனு மிப்பனுவ னின்னடிக் கன்புகொடு
சாற்றின னுவந்தாளுவாய்
காதலுட னடியர் தொழு கறைமிடற் றண்ணலே
கற்பக விராசமேவுங்
கங்கைபுனை யீசனே மங்கைமகிழ் நேசனே
கயிலையங் கிரிவாசனே.

உசாத்துணை


✅Finalised Page