சாஸ்திரம் ஐயர்
From Tamil Wiki
- சாஸ்திரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாஸ்திரம் (பெயர் பட்டியல்)
சாஸ்திரம் ஐயர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், ஆசிரியர், சமண சமயத்தைச் சேர்ந்த சிந்தாந்த நூல் ஒன்றை இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
சாஸ்திரம் ஐயர் சமண சமயத்தைச் சேர்ந்த அறிஞர். ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு சமண சமய சிந்தாந்தங்களைக் கற்பித்தார்.
மாணவர்கள்
- வில்லியம் ஹென்றி ட்ரூ (துரு தேசிகர்) (Rev. William Hoyles Drew, L.M.S)
- பவுவர் தேசிகர் (Rev. Henry Bower, S.P.G, 1813-1885)
இலக்கிய வாழ்க்கை
சாஸ்திரம் ஐயர் தன் மாணவர் பவுவர் தேசிகரின் வேண்டுகோளுக்கு இணங்கி சமண சமய சித்தாங்களை விளக்கும் கிரந்த நூலான ”சைந சமய சிந்தாந்த நூல்” என்ற நூலை எழுதினார். பவுவர் தேசிகர் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தான் அச்சிட்ட வேத அகராதியோடு 1841-ல் பதிப்பிதார்.
மறைவு
சாஸ்திரம் ஐயர் 1866-ல் காலமானார்.
நூல்கள்
- சைந சமய சிந்தாந்த நூல்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Aug-2023, 10:07:45 IST