under review

சயம்பர்

From Tamil Wiki

சயம்பர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சயம்பர் யாழ்ப்பாணம் சாவகச்சேரிக் கோயிற்பற்றைச் சேர்ந்த மறவன்புலத்தில் வேளாளர் மரபில் பிறந்தார். இருபாலைச் சேனதிராய முதலியாரின் மாணவர்.

இலக்கிய வாழ்க்கை

சயம்பர் 'உமாபதி மாலை' எனும் பெயரிய ஒர் பாடலைப் பாடினர். அதில் பத்து ஆசிரிய விருத்தங்கள் உள்ளன.

பாடல் நடை

திருவருட் பரமா னந்தனை ஞானச்
செஞ்சுடர் விளக்கையென் னுளத்திற்
றெவிட்டாத தேனைக் கருணைவா ரிதியைத்
தில்லைமன் முடிய சிவனைக்
குருவருட் கோலா கலவுமா பதியைக்
கும்பிட்டேன் குறைமுறை யிட்டுக்
குளிர்புக ழருளா சிரியமை யாறு
பாமாலை வறியனேன் கூற
அருவ்ருட் கருவா யிருவடி வாய்த்திரா
கப்பரா பரப்பெருஞ் சோதி
யாதிநா தாந்தன னந்தவடி வுமைங்
கரநால் வாய்முக் கண்ணும்
இருவருட் செவியோர் மருப்புடன் புழைக்கை
யேந்தியகூ ரியதிருக் கோட்டி
யானைமா முகவ னேகனெம் பெருமா
னிணையடி யிறைஞ்சிவாழ் வாமே

நூல்கள்

  • உமாபதி மாலை

உசாத்துணை


✅Finalised Page