under review

சம்பந்த சரணாலய சுவாமி

From Tamil Wiki

சம்பந்த சரணாலய சுவாமி (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சம்பந்த சரணாலய சுவாமி திருக்கைலாச பரம்பரைத் தருமபுர ஞானசம்பந்த தேசிகரின் ஆதீனத்தைச் சேர்ந்தவர். இவர் மரபில் நூற்றிப்பதினால்வர் ஆசாரி அபிஷேகம் பெற்றனர். சம்பந்த சரணாலயர் என்பது தீட்சா நாமம். இயற்பெயர் தெரியவில்லை. வெள்ளியம்பலத்தம்பிரானின் மாணவர் என கர்ணபரம்பரைச் செய்தியின் மூலம் அறியலாம்.

இலக்கிய வாழ்க்கை

கச்சியப்ப சிவாச்சாரியார் செய்த கந்த புராணத்தை சுருக்கிப் பாடி கந்தபுராணச் சுருக்கம் என்னும் நூலை வெளியிட்டார். இது மைசூர் அரசரின் வேண்டுகோளின்படி இயற்றப்பட்டது. சம்பந்த சரணாலயர் தன் ஞானகுரு திருஞானசம்பந்தர் மேல் 'சிகாரத்தினமாலை' எனும் பதிகம் பாடினார்.

கந்தபுராண சுருக்கத்திற்குத் தங்கவேலுச் சாமித்தேவர், வட்டுக்கோட்டை க.குருமூர்த்தி ஐயர் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர்.

நூல் பட்டியல்

  • கந்தபுராணச் சுருக்கம்

உசாத்துணை


✅Finalised Page