சண்முகச்சட்டம்பியார்
- சண்முகச்சட்டம்பியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சண்முகச்சட்டம்பியார் (பெயர் பட்டியல்)
சண்முகச்சட்டம்பியார் (நதானியேல்) (பொ.யு. 1794) ஈழத்து தமிழ்ப் புலவர், ஆசிரியர். கிறிஸ்துவ மதம் சார்ந்த செய்யுள்களை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
சண்முகச்சட்டம்பியார் யாழ்ப்பாணம், அராலியில் மு.சுவாமிநாதருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். ஆங்கிலத்திலும் புலமை பெற்றார். மல்லாகம், அளவெட்டி முதலான ஊர்களில் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார். சைவராயிருந்து பின்னர் குடும்பத்துடன் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவினார். இவர் ஆசிரியராகவிருந்து மிஷனரிமார் பலருக்குக் கல்வி கற்பித்தார். மத போதகராக ஆனார்.
இலக்கிய வாழ்க்கை
சண்முகச்சட்டம்பியார் ஏசுவின் அன்னையான மரியாளை வாழ்த்திப் பாடல்கள் பாடினார். சில தனிப்பாடல்கள் பாடினார்.
பாடல் நடை
நெல்லாலை போல்வளரு நீர்ப்பண்ணை சூழ்ந்திலங்கு
சில்லாலை யென்னுந் திருவூரில் - எல்லாரும்
போற்றுசரு வேசுரன் ருய் பொற்பாத தாமரையைப்
போற்று மனமே புகழ்ந்து.
மறைவு
சண்முகச்சட்டம்பியார் 1849-ல் காலமானார்.
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:சண்முகச்சட்டம்பியார், சுவாமிநாதர்: நூலகம்
- பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Mar-2023, 06:13:34 IST