under review

சங்கீத கலாநிதி விருதுகள்

From Tamil Wiki
சங்கீத கலாநிதி - 2023 (படம் நன்றி: இந்து தமிழ் திசை)

சங்கீத கலாநிதி விருது, கர்நாடக சங்கீதத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. மியூசிக் அகாடமியால், 1929 முதல், ஆண்டுதோறும் சிறந்த கர்நாடக இசைக் கலைஞர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ‘சங்கீத கலாநிதி’ என்பதற்கு ’இசைக்கலையின் பெருஞ்செல்வம்’ என்பது பொருள்.

சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள் பட்டியல் (2022 வரை)

ஆண்டு விருது பெற்றவர்
1929 டி. வீ. சுப்பா ராவ், டி. எஸ். சபேச ஐயர்
1930 ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், பி. சுப்பாராவ்
1931 பழமனேரி சுவாமிநாத ஐயர்
1932 டைகர் கே. வரதாச்சாரியார்
1933 க. பொன்னையா பிள்ளை
1934 டி. எஸ். சபேச ஐயர்
1935 மைசூர் வாசுதேவாச்சாரியார்
1936 உமையாள்புரம் சுவாமிநாத ஐயர்
1937 மாங்குடி சிதம்பர பாகவதர்
1938 அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
1939 முசிரி சுப்பிரமணிய ஐயர்
1940 கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர்
1941 பேராசிரியர் துவாரம் வெங்கடசுவாமி நாயுடு
1942 மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர்
1943 பல்லடம் சஞ்சீவ ராவ்
1944 டி. எல். வெங்கட்ராம ஐயர்
1945 விருது அளிக்கப்படவில்லை
1946 மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
1947 செம்மங்குடி ஆர். சீனிவாச ஐயர்
1948 கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை
1949 முடிகொண்டான் சி. வெங்கடராம ஐயர்
1950 கரூர் சின்னசுவாமி ஐயர்
1951 செம்பை வைத்தியநாத பாகவதர்
1952 காரைக்குடி சாம்பசிவ ஐயர்
1953 திருப்பாம்புரம் என். சுவாமிநாத பிள்ளை
1954 சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
1955 மருங்காபுரி கோபாலகிருஷ்ண ஐயர்
1956 திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை
1957 மைசூர் டி. சௌடையா
1958 ஜி. என். பாலசுப்பிரமணியம்
1959 மதுரை மணி ஐயர்
1960 டி. கே. ஜெயராம ஐயர்
1961 திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை
1962 கே. எஸ். பாப்பா வெங்கடராமையா
1963 பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்
1964 ஆலத்தூர் சிவசுப்ரமணிய ஐயர்
1965 ஆலத்தூர் ஸ்ரீனிவாச ஐயர்
1966 விருது அளிக்கப்படவில்லை
1967 பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்
1968 எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
1969 மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார்
1970 டி.கே. பட்டம்மாள்
1971 பாபநாசம் சிவன்
1972 பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி
1973 டி. பாலசரஸ்வதி
1974 விருது அளிக்கப்படவில்லை
1975 ஆர். அனந்தகிருஷ்ண சர்மா
1976 டி. பிருந்தா
1977 எம். எல். வசந்தகுமாரி
1978 எம். பாலமுரளிகிருஷ்ணா
1979 கே. எஸ். நாராயணசுவாமி
1980 டி. என். கிருஷ்ணன்
1981 டி. எம். தியாகராஜன்
1982 எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார்
1983 டாக்டர் எஸ். பினாகபாணி
1984 மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார்
1985 டாக்டர் எஸ். ராமநாதன்
1986 கே. வி. நாராயணசுவாமி
1987 பி. ராஜம் ஐயர்
1988 டி. விஸ்வநாதன்
1989 மகாராஜபுரம் வி. சந்தானம்
1990 டி. கே. ஜெயராமன்
1991 நெடுநூரி கிருஷ்ணமூர்த்தி
1992 தஞ்சை கே. பி. சிவானந்தம்
1993 மணி கிருஷ்ணசுவாமி
1994 டி. கே. மூர்த்தி
1995 ஆர். கே. ஸ்ரீகண்டன்
1996 டாக்டர் என். ரமணி
1997 எம். எஸ். கோபாலகிருஷ்ணன்
1998 ஷேக் சின்ன மௌலா
1999 டி. கே. கோவிந்த ராவ்
2000 ஆர். வேதவல்லி
2001 உமையாள்புரம் கே. சிவராமன்
2002 சிக்கில் சகோதரிகள் குஞ்சுமணி - நீலா
2003 டி. வி. சங்கரநாராயணன்
2004 வேலூர் ஜி. ராமபத்ரன்
2005 எம். சந்திரசேகரன்
2006 மதுரை டி. என். சேஷகோபாலன்
2007 பாலக்காடு ஆர். ரகு
2008 ஏ. கே. சி. நடராஜன்
2009 வலையப்பட்டி ஏ. ஆர். சுப்ரமணியம்
2010 பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா, சி. லலிதா
2011 திருச்சி சங்கரன்
2012 திருச்சூர் வி. ராமச்சந்திரன்
2013 சுதா ரகுநாதன்
2014 டி. வி. கோபாலகிருஷ்ணன்
2015 சஞ்சய் சுப்ரமண்யன்
2016 ஏ. கன்யாகுமாரி
2017 என். ரவிகிரண்
2018 அருணா சாயிராம்
2019 டாக்டர் எஸ். சௌம்யா
2020 நெய்வேலி ஆர். சந்தானகோபாலன்
2021 திருவாரூர் ஸ்ரீ பக்தவத்சலம்
2022 லால்குடி ஜி.ஜெ. ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலக்ஷ்மி

உசாத்துணை


✅Finalised Page