under review

சங்காட் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki

சங்காட் தேசிய வகை தமிழ்ப்பள்ளி பேரா மாநிலத்தின் பத்துகாஜா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. முழு அரசு உதவி பெற்ற இப்பள்ளியின் பதிவு எண் ABD2169.

சங்காட் தமிழ்ப்பள்ளி சின்னம்

வரலாறு

சங்காட் தமிழ்ப்பள்ளி 1929-ம் ஆண்டு பத்துகாஜா நகரப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த அம்மைத் தடுப்பு மையத்தில் தொடங்கப்பட்டது. பத்து காஜா நகரப்பகுதியில் வசித்த தமிழ்த்தொழிலாளர்களால் இப்பள்ளி தொடங்கப்பட்டது. 23 மாணவர்களுடன் சங்காட் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. 1935-ம் ஆண்டு முழு அரசு நிதியாதரவு பெற்ற பள்ளியாக மாறியது.

கட்டிட வரலாறு

1953-ம் ஆண்டு பத்து காஜா நகரில் இயங்கிய சரஸ்வதி வித்யசாலை தமிழ்ப்பள்ளி சங்காட் தமிழ்ப்பள்ளியுடன் இணைக்கப்பட்டதால் மாணவர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு கண்டது. மாணவர் எண்ணிக்கை உயர்வால் புதியக் கட்டிடம் எழுப்புவதற்காக மேடை நாடகங்கள் நடத்தப்பட்டு நிதி திரட்டப்பட்டது. 1959-ம் ஆண்டு பத்து காஜா ஈயச்சுரங்கப்பகுதியில் இயங்கிய தமிழ்ப்பள்ளியும் சங்காட் தமிழ்ப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது. பள்ளியின் இணைக்கட்டிடக் கட்டுமான நிதித்திரட்டலுக்காகக் கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கலை நிகழ்ச்சியின் வாயிலாகத் திரட்டப்பட்டத் தொகையைக் கொண்டு மூன்று வகுப்பறைகள் கொண்ட இணைக்கட்டிடம் எழுப்பப்பட்டது.

சங்காட் தமிழ்ப்பள்ளி கட்டிடம்
தமிழ்ப்பள்ளி வாயில்

2002-ம் ஆண்டு பத்துகாஜா நகரப்பகுதியில் 2.86 ஏக்டர் பரப்பளவு கொண்ட நிலத்தில் பள்ளி புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது. முழு அரசு உதவியுடன் அமைந்த இரண்டு மாடிக் கட்டிடத்தில் பள்ளி 2003-ம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கியது.

பள்ளி முகவரி

தேசிய வகை சங்காட் தமிழ்ப்பள்ளி

Jalan Changkat
31000, Batu Gajah
Perak, Malaysia

உசாத்துணை

  • சங்காட் தமிழ்ப்பள்ளி ஆண்டிதழ் 2010
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், 2016


✅Finalised Page