under review

க. நஞ்சையப் புலவர்

From Tamil Wiki

To read the article in English: K. Nanjaya Pulavar. ‎


க. நஞ்சையப் புலவர் தமிழ்ப்புலவர். இவர் எழுதிய சீட்டுக்கவி கள் கிடைக்கின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

கொங்கு நாடு கெளந்தப்பாடிப் புதூரில் வன்னியர் குடியில் க. நஞ்சையப் புலவர் பிறந்தார். (அக்கினிகுலம் என பாடல்களில் சொல்லிக்கொள்கிறார்) பத்தாவது வயதில் வைசூரி நோய் வந்து கண்பார்வையை இழந்தார். பெற்றோர்கள் இறந்ததால் செந்தேவன்பாளையம் பஞ்சாங்கம் சிதம்பர ஐயரிடம் வளர்ந்தார். ஐயர் இவருக்கு முதுகின் மீது எழுதி எழுத்துக்களையும், ஐந்திலக்கணம், இலக்கியம், சங்கநூல்கள், காலக்கணிதம் முதலியவற்றைக் கற்பித்தார். நாரயண கவிராயர் இவரின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

சீட்டுக்கவி கள் பல பாடினார். தனிப்பாடல்கள் பல பாடினார்.

பாடல் நடை

சீட்டுக்கவி

மாமேவு வெண்பாக் கலித்துறை விருத்தங்கள்
வண்ணப்ர பந்தம்முதலாம்
வண்மையுள பலபிர பந்தமும் சொல்லுவோம்
வன்னியகுல பிரதாபர்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:06 IST