under review

க. சுப்பையர்

From Tamil Wiki

க. சுப்பையர் (பொ.யு. 1820 - 1870) தமிழ்ப்புலவர், ஜோதிடர், அர்ச்சகர். தனிப்பாடல்கள் பல பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

க. சுப்பையர் யாழ்ப்பாணம் மானிப்பாயில் 1820-ல் பிராமணர் குடும்பத்தில் கதிரேசையர், அன்னப்பிள்ளை இணையருக்கு மகனாகப் பிறந்தார். சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளைக் கற்றார். காரிகை, ஜோதிடம் ஆகியவற்றை நவாலி கா. தம்பையரிடம் (முத்துக்குமாரர்) கற்றார். கொழும்பிலுள்ள சைவாலயங்களுக்கு பல்லாண்டுகளாக அர்ச்சகராக இருந்தார். சீவாந்தம் தெக்கண மானிப்பாய் வேரகப்பிள்ளையார் கோயிலில் சில காலம் இருந்தார். கொழும்பில் ஜோதிடம் பார்த்தார். திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் இல்லை.

இலக்கிய வாழ்க்கை

க. சுப்பையர் பூசகராயிருந்தபோது தனிப்பாடல்கள் பல பாடினார். 1841 வரை மானிப்பாயில் சிறுவர் ஆடிய அரிச்சந்திர நாடகத்திற்குப் பல தருக்கள் பதங்கள் ஆகியவைப் பாடினார். நன்னெறிக்கொத்து நூலுக்குச் சாற்றுகவி எழுதினார்.

க. சுப்பையர் புராண இதிகாசங்களுக்குப் பொருள் கூறுவதில் சிறப்பு பெற்றவர். ஆணல்ட் சதாசிவம்பிள்ளை சுப்பு ஐயரிடம் சமஸ்கிருதத்தையும், காந்த புராணம், காரிகை ஆகிய நூல்களையும் பயின்றார்.

உசாத்துணை


✅Finalised Page