க.சா. கதிர்வேல் நாடார்
From Tamil Wiki
க.சா. கதிர்வேல் நாடார் (பொ.யு. 20-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். பகடிக் கதைகள், பாடல்கள், கட்டுரைகள் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
க.சா. கதிர்வேல் நாடார் பொ.யு. 20-ம் நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்தவர்.
இதழியல்
- 'மகாவிகடதூதன்' என்னும் பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார்.
- சென்னை இராயபுரத்தில் 'விசயவிகடன்' என்னும் இதழைத் தொடங்கி நடத்தினார்.
இலக்கிய வாழ்க்கை
க.சா. கதிர்வேல் நாடார் நகைச்சுவை நிறைந்த கதைகள், கட்டுரைகள், பாடல்கள் எழுதினார். 'கருப்புகழ்', 'அகடவிகடமஞ்சரி', 'பகையதல் அல்லது படுதோஷி விலாசம்', 'விளங்காபுரம் விகடக் கோர்ட்டு விசாரணை', 'விகடவிசய பூடணம்' ஆகிய நூல்களின் ஆசிரியர்
'கருப்புகழ்' என்ற நூல் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் பாடல்கள் சிலவற்றை நகைச்சுவையாக மாற்றி அமைக்கப்பட்டது.
நூல் பட்டியல்
- கருப்புகழ்
- அகடவிகடமஜ்சரி
- பகையதல் அல்லது படுதோஷி விலாசம்
- விளங்காபுரம் விகடக் கோர்ட்டு விசாரணை
- விகடவிசய பூடணம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2025, 04:31:33 IST