under review

கோவிந்தசாமி

From Tamil Wiki
கோவிந்தசாமி

கோவிந்தசாமி (பிறப்பு: 1943) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்.

வாழ்க்கைக் குறிப்பு

கோவிந்தசாமி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அம்மாபேட்டையில் 1943-ல் பிறந்தார். அம்மா காளியம்மாள் கூத்துக் கலைஞர். கோவிந்தசாமி கூத்து இல்லாத சமயங்களில் கூலி வேலை செய்வார்.

கலை வாழ்க்கை

கோவிந்தசாமி அம்மாபேட்டை செட்டு, பொன்னாகரம் சின்னத்தம்பி செட்டு, தொம்மராம்பட்டி பெருமாள் செட்டு, மேச்சேரி மாயவன் செட்டு ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். ஈரோடு, நாமக்கல், தர்மபுரி ஆகிய இடங்களில் கூத்து ஆடினார்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கதைகள்
  • இராமாயணம்
  • கோவலன் கதை
  • அரிச்சந்திரா நாடகம்
  • வீர வன்னியர் பிறப்பு
  • ஆதிநாடகம்
  • மதுரைவீரன்
  • கருவாட்டு நாடகம்
  • அண்ணன்மார் நாடகம்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Nov-2024, 13:02:18 IST