கொற்றியார்(கலம்பக உறுப்பு)
கொற்றியார் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. கொற்றியார் வைணவ வேடம் பூண்டு ஆடிப்பாடுபவர்.
விளக்கம்
கொற்றியார் தலை மொட்டையடித்துத் திருமண். காப்பு முதலிய ஸ்ரீ வைஷ்ணவ சின்னங்களைக் தரித்துச் சூலம் கையில் தாங்கித் துர்க்கா தேவியை உபாசித்துக் கொண்டு ஊர்தோறும் பிச்சையெடுத்து உண்ணுபவர். இங்ஙனம் ஆடிப்பாடி வரும் வரும் மகளிரை நோக்கி வேட்கையுற்ற ஒருவன் அவர்களிடம் தன் வேட்கையைப் புலப்படுத்திக் கூறுவது கொற்றியார் என்னும் உறுப்பின் கலம்பக உறுப்பின் இலக்கணம்.
எடுத்துக்காட்டு
புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம்
பொறியமருங் கொற்றியார் புள்ளிருக்கு
வேளூரர்பொன்னிநாட்டி,
னெறியமருங் கொற்றியார் முகிலொடுமின்
மறையுமென நீத்த தல்லால்,
வெறியமருங் கற்றையார் கருங்குழலை
யிவரெங்கே விற்றார் கண்கண்,
மறியமருங் கொற்றியார் சிறியமருங்
கொற்றியார் வைத்த பேரே. (80)
காசிக் கலம்பகம்
வழுத்துமவர்க் கானந்த வாழ்வையருள் வார்காசி வளமை யெல்லாம்
கொழுத்ததமி ழாற்பாடித் துளசிமணி தரித்தாடுங் கொற்றி யாரே
பழுத்ததவக் கோலமுங்கைச் சங்கமுமா ழியுங்கண்டு பணிந்தே மாகின்
முழுத்ததவத் தால்யாமு மாலாயி னேங்கூடி முயங்கு வீரே.
வைணவக் கோலம் கொண்ட கொற்றியார் மேல் மையல் கொள்ளல்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:38:48 IST