கே. மாரிமுத்து
கே. மாரிமுத்து (பிறப்பு: 1971) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார். ஐந்தாவது தலைமுறை கூத்துக் கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
கே. மாரிமுத்து தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் நசியனூருக்கு அருகில் அடுக்குப்பாறையில் 1971-ல் பிறந்தார். தந்தை பெயர் கந்தசாமி, கூத்துக் கலைஞர். பூர்வீகம் நாமக்கல். பாட்டி முத்தாலம்மா, தாத்தா மாரிமுத்து ஆகியோரும் கூத்துக் கலைஞர்கள். கூத்து இல்லாத நாட்களில் துணி வியாபாரம் செய்வார்.
கலை வாழ்க்கை
கே. மாரிமுத்துவின் வாத்தியார் சிவராஜ். கே.மாரிமுத்துவின் பாட்டன் முத்தாலம்மன் நாடக சபாவை நடத்தினார்.
கே. மாரிமுத்து கலைவாணி நாடக சபா, திருச்செங்கோடு சரசுவதி நாடகக் கலைக்குழு, நாமக்கல் சரசுவதி நாடக சபா, சேலம் ஆட்டயாம்பட்டி அம்மன் நாடகக் கலைக்குழு ஆகியவற்றில் கூத்து ஆடினார். கூத்தில் துரியோதனன், துச்சாதனன், தர்மன், பீமன், அர்ஜுனன் ஆகிய வேடங்களில் ஆடினார்.
பங்கேற்ற கூத்துகள்
- மதுரை வீரன்
- மகாபாரதக் கூத்துகள்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Dec-2024, 07:19:01 IST