கே. மகேஸ்வரன்
கே. மகேஸ்வரன் (பிறப்பு: 1966) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர். ஐந்தாம் தலைமுறை கூத்துக் கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
கே. மகேஸ்வரன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலுள்ள பெருங்கட்டூரில் 1966-ல் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார்.
கலை வாழ்க்கை
கே. மகேஸ்வரனின் வாத்தியார் ஆக்கூர் சீனிவாசன். மூன்றாவது வகுப்பு படிக்கும்போது அப்பாவும் சித்தப்பாவும் கூத்துக் கலைஞர்களாக இருந்ததால் சிறு சிறு வேடங்களில் நடித்தார். பின்னர் படிப்படியாக மந்திரி வேடம், மெயின் வேடம் என கூத்தில் ஆடினார். அனுமந்தண்டலம் மாரியம்மன் கட்டைக்கூத்து மன்றம், பெருங்கட்டூர் பொன்னுசாமி தெருக்கூத்து மன்றம், பொன்னுசாமி கன்னியப்பன் கம்பெனி, பொன்னுசாமி பொன்னியம்மன் கம்பெனி, காஞ்சிபுரம் கட்டைக்கூத்து மன்றம் ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார்.
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதக் கூத்து
- மயில்ராவணன்
- நளாயினி சரித்திரம்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 10:06:54 IST