கே. சின்னப்பிள்ளை
கே. சின்னப்பிள்ளை (பிறப்பு: 1957) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார். இரண்டாம் தலைமுறை கூத்துக் கலைஞர். கண்ணாயிரம் நாடகக் குழுவை நடத்தினார். தெற்கத்தி பாணி கூத்துக் கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
கே. சின்னப்பிள்ளை திருவண்ணாமலை மாவட்டம், பழயனூர் கிராமத்தில் கண்ணாயிரத்திற்கு மகனாக 1957-ல் பிறந்தார். அப்பா கூத்துக் கலைஞர். எட்டாம் வகுப்பு வரை பயின்றார். தெருக்கூத்து இல்லாத சமயங்களில் கூலி வேலை செய்து வருகிறார்.
கலை வாழ்க்கை
கே. சின்னப்பிள்ளை கண்ணாயிரம் நாடகக் குழுவைச் சார்ந்தவர். அப்பா கண்ணாயிரத்தின் நாடகக் குழுவில் ஏழுமலை, தாங்கல்சேகர், ராகோத், தரணி முத்தையா ஆகியோருடன் இணைந்து கூத்து கற்றார். அப்பா இறந்தபின் கண்ணாயிரம் நாடகக் குழுவை எடுத்து நடத்தினார். தெற்கத்தி பாணியைச் சேர்ந்தவர். மகாபாரதம், ராமாயணம், நாவல்ஸ் ஆகிய கூத்துகள் நடத்தினார்.
துரியோதனன், கர்ணன், ராஜபார்ட் ஆகிய வேடங்களில் நடித்தார். ஆரம்ப காலங்களில் பெண் பாத்திரங்களிலும் நடித்தார். விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருப்பதி ஆகிய இடங்களில் கூத்து நடத்தினார். கலவை குமாரசாமி, தேவனாம்பட்டு ராஜகோபால், வாடியாங்குப்பம் நாராயணசாமி, அம்மணி அம்மாள் ஆகியோரின் தெருக்கூத்து பிரதிகளைக் கொண்டு கூத்து நடத்தினார்.
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதம்
- ராமாயணம்
- நாவல்ஸ்
- பாரத பிரசங்கம்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம் - கோ. பழனி - சி.முத்துகந்தன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 10:02:26 IST