under review

குலபதிநாயனார்

From Tamil Wiki

குலபதிநாயனார் மதுரை கடைச்சங்கப்புலவர்களுள் ஒருவர். திருவள்ளுவமாலைக்கு சிறப்புப்பாயிரம் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

குலபதிநாயனார் பாண்டியநாடு மணமேற்குடியில் பிறந்தார். நெடுமாறன் எனும் பாண்டிய அரசனின் முதல் மந்திரி. அவர் சமணத்தைத் தழுவியபோது திருஞானசம்பந்தரை அழைத்து அரசனின் மனத்தை மாற்றி மீண்டும் சைவ மதத்தை தழுவச் செய்தார். எண்ணாயிரம் சமணர்களை கழுவிலேற்றியும், எஞ்சியோரை ஊரை விட்டு அகற்றியவரும் இவராக இருக்கலாம்.

இலக்கிய வாழ்க்கை

குலபதிநாயனார் திருக்குறளுக்கு சிறப்புப்பாயிரம் எழுதினார்.

விவாதம்

குலபதிநாயனாரும் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் குலச்சிறை நாயனாரும் ஒருவரே என்று கருதுவோரும் உளர்.

பாடல் நடை

  • திருவள்ளுவர் சிறப்புப்பாயிரம்

உள்ளக் கமல மலர்த்தி யுளத்துள்ள
தள்ளற் கரியவிரு டள்ளுதலால் வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரு மொக்குமெனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு

உசாத்துணை


✅Finalised Page