under review

குலசேகர பாண்டியன்

From Tamil Wiki

குலசேகர பாண்டியன் (பொ.யு. 13-ம் நூற்றாண்டு) மதுரையை ஆண்ட அரசர், தமிழ்ப்புலவர். அம்பிகை மாலை நூலின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

குலசேகர பாண்டியன் பொ.யு. 13-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட அரசர். மதுரையை ஆண்ட பல அரசர்களுக்கு இப்பெயர் உள்ளது. ஆனால் எந்த அரசர் என்பதை சரியாக அறிய இயலவில்லை என தமிழறிஞர்கள் கருதுகின்றனர்.

இலக்கிய வாழ்க்கை

குலசேகர பாண்டியன் 'அம்பிகை மாலை' நூலை எழுதினார். இந்நூலில் முப்பது கட்டளைக்கலித்துறைப் பாக்கள் உள்ளன. பாண்டிய குலசேகரன் லிங்கபுராணத்தை இயற்றியதாக இந்நூலின் சிறப்புப்பாயிரம் கூறுகின்றது. வாயுசங்கிதையை குலசேகர வரகுணராம பாண்டியன் இயற்றியதாகவும் இந்நூலின் சிறப்புப்பாயிரம் கூறுகின்றது.

பாடல் நடை

  • அம்பிகை மாலை

ஒழியாப் பனித்தடங் கண்ணீர் சொரியவந் துன்னடிக்கே
பொழியாப் புதுமலர் இட்டுநிற் பாருக்குன் பொழிகருணை
விழியால் சுரப்ப அலர்ந்த,செந் தாமரை வீடொன்றவே
அழியாப் பதந்தரு வாய்,மது ராபுரி அம்பிகையே.

உசாத்துணை



✅Finalised Page