under review

குறுங்கலி(பெருந்திணை)

From Tamil Wiki

குறுங்கலி புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. (பெருந்திணைக் காமமாகிய)கேடு சிறுமை பெறுதலைக் கூறுவது. தலைவனின் பரத்தைமையைச் சிறுமை செய்வது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தலைவியைக் கைவிட்டுத் தலைவன் நறுமணம் மிக்க கூந்தலையுடைய பிற மகளிரை நயக்கும் வேட்கை கெடும்படி கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

நாறு இரும் கூந்தல் மகளிரை நயப்ப
வேறுபடு வேட்கை வீயக் கூறின்று(கொளு 17.18)

வெண்பா

பண்ணவாம் தீம்சொல் பவளத் துவர்ச் செவ்வாய்
பெண்ணவாம் பேர் அல்குல் பெய்வளை - கண்ணவாம்
நல்நலம் பீர் பூப்ப நல்கார் விடுவதோ
தொல் நலம் உண்டார் தொடர்பு (342)

பொருள்: பெண்ணே விரும்பும் இனிய குரலையும் பவளவாயினையும், பெரிய அல்குலையும் உடைய தலைவியினது கண்கள் பீர்க்கம்பூப் போலப் பசக்கும்படி பிரிந்து இவள் தொடர்பை விட்டுவிடுதல் அறமாகுமோ?'

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Aug-2025, 19:29:09 IST