under review

குய்ஜௌ

From Tamil Wiki
குய்ஜௌ கல்லறை [முதற்படம்] நன்றி: National Archives UK

குய்ஜௌ(kwijau) பழங்குடியினர் மலேசியாவின் சபா மாநிலத்தில் வசிக்கின்றனர். குய்ஜௌ பழங்குடியினர் கடசான்-டூசுன் இனக்குழுவைச் சார்ந்தவர்கள்.

தொன்மம்

கடசான் டூசுன் தொன்மங்களின்படி, குய்ஜௌ பழங்குடிகளின் மூதாதையர்கள் நூனுக் ராகாங்கிலிருந்து இன்றைய வசிப்பிடத்திற்குப் புலம் பெயர்ந்துள்ளனர் என நம்புகின்றனர். இப்புலப் பெயர்வு 600-700 ஆண்டுகளில் நிகழ்ந்ததாக நம்புகின்றனர். இவர்களின் குலத்தலைவர் அகி நாநாங்கிஸ். அதற்கு முன், குய்ஜௌ பழங்குடியினர் க்ரோக்கர் மலையில் தங்கியிருந்தனர். 1750-களில் குய்ஜௌ பழங்குடி கிமானிஸில் வசிக்கும் டூசுன் தங்காரா எனும் பழங்குடியைக் கழுத்தறுத்து கொல்வது வழக்கமாக இருந்தது. இத்தீய செயலினாலே, க்ரோக்கர் மலை வறண்டு, பஞ்சத்தில் குய்ஜௌ மக்கள் மாண்டனர் என நம்புகின்றனர்.

வசிப்பிடம்

குய்ஜௌ பழங்குடியினர் சபா மாநிலத்தில் பிங்கோர், அபின்-அபின், கெனிங்காவ் வட்டாரங்களில் வசிக்கின்றனர்.

தொழில்

குய்ஜௌ பழங்குடியினர் தொழில் விவசாயம்.

மொழி

குய்ஜௌ மொழி ஆஸ்திரொனேசிய(Austronesian) மொழி குடும்பத்தைச் சேர்ந்தது.

நம்பிக்கை

குய்ஜௌ பழங்குடியினரில் சிறுபான்மையினர் கிறிஸ்துவர்கள். பெரும்பாலானவர்கள் ஆன்மவாதத்தைப் பின்பற்றுகின்றனர். கடசான்-டூசுன் நம்பிக்கையின் மொமொலியனிஷத்தைப் [momolianism] பின்பற்றுகின்றனர்.

நடனம்

குய்ஜௌ பழங்குடியினர் இருவகை நடனங்களை ஆடுவர். முதலாவது, மூருட் இனக்குழுவைப் போல ஆடப்படும் மகுனாதிப் நடனம். மகுனாதிப் மூங்கில் நடனம். இந்த நடனத்தின் சிறப்பம்சம் மூங்கிலினுள் கால்கள் சிக்காமல் துள்ளி துள்ளி ஆடுவது.

மன்சாயா நடனம்

இரண்டாவது, மன்சாயாவ் நடனம். மன்சாயா நடனத்தில் ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் ஆடுவர். இந்த நடனத்தில் கைவிரல்களும் பாதவிரல்களும் கோங் இசைக்கேற்ப மிக மெல்ல அசைக்கப்படும். மன்சாயா மெல்லிய அசைவுகளைக் கொண்ட நடனம்.

உசாத்துணை


✅Finalised Page