under review

கிருஷ்ணையர்

From Tamil Wiki

கிருஷ்ணையர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமையில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கிருஷ்ணையர் மாயூரம் என்னும் ஊரில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கிருஷ்ணையர் 'சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்' பாடினார்.

விவாதம்

மயிலாடுதுறை 'அவையாம்பிகை சதகம்' பாடியவரும், பொ.யு. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுபவருமான மாயூரத்தினையடுத்த நல்லதுக்குடி கிருட்டிணையரும், திருவையாறு முத்துசாமி பாரதியாரின் விசுவபுராணத்திற்கு உரை கண்டவருமான மயிலாடுபுரம் கிருட்டிணையரும்(1884) ஒருவரா, இருவரா அல்லது மூவரா என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை.

நூல் பட்டியல்

  • சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்

உசாத்துணை


✅Finalised Page