under review

காலச்சக்கரம்

From Tamil Wiki
காலச்சக்கரம்

காலச்சக்கரம் (காலச்சக்கரத் திசைப்புத்தி பலன்) (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தில்லைநாயகப் புலவர் சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்த நூல். ஜோதிடத்திற்கு அடிப்படையான நூல்களில் ஒன்று. காலச்சக்கரத் திசையின் புத்தி பலன் பற்றி அறிய உதவும் நூல்.

ஆசிரியர்

காலச்சக்கரம் நூலை தில்லைநாயகப் புலவர் வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தார்.

உள்ளடக்கம்

காலச்சக்கரம் பாயிரம், பொது, வலவோட்டு, இடவோட்டு என்ற நான்கு பகுப்புகளைக் கொண்டது. பாயிரம் இரண்டு பாட்டுக்களையும், வலவோட்டும், இடவோட்டும் நூற்றியிருபத்தியெட்டு பாட்டுக்களும் கொண்டது. பொது என்னும் பகுதியில் வலவோட்டும், இடவோட்டும், திசை நடக்கும் முறைகளும், காலச்சக்கரத்திசையாண்டும், திசைகளின் பரமாயுளும், திசையுள் புத்திகள் நடக்கும் கதிகளும், புத்திகளின் நடப்பினை அறிவிக்கும் வாக்கியங்களும் உள்ளன.

வலவோட்டில் வலவோட்டுத் திசை பன்னிரெண்டிற்கும் புத்திகளை முறையாகக் கூறி, அவற்றிற்கு பலன்கள் கூறப்பட்டுள்ளன. இடவோட்டில் இடவோட்டுத் திசை பன்னிரெண்டிற்கும் புத்திகளை முறையாகக் கூறிப் பலன்கள் கூறப்பட்டுள்ளன. வலவோட்டிலும், இடவோட்டிலும் திசைக்கு மட்டும் உள்ள பாடல்கள் அந்தாதியாகக் கூறப்பட்டுள்ளன.

இணைப்புகள்


✅Finalised Page