under review

காமினி

From Tamil Wiki

To read the article in English: Kamini. ‎


காமினி தமிழ்ப்புலவர். பெண்பால் புலவர். தனிப்பாடல்கள் பல இயற்றியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

கழைக்கூத்தாடி வகுப்பில் தோன்றியவர். விச்சுளிப்பாய்ச்சல் என்ற கழைக்கூத்தைக் கற்றவர். தமிழ் நூல்களை புலவர் ஒருவரிடமிருந்து வரன்முறையாகக் கற்றார். அயனம்பாக்கம் சடையநாத வள்ளலிடமிருந்து பரிசுகள் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

தொண்டை மண்டல சதகத்தில் காமினி புலவர் பற்றிய குறிப்புகள் உள்ளன. தனிப்பாடல்கள் பல இயற்றியுள்ளார். அயனம்பாக்கம் சடையநாத வள்ளலின் பெருமையைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார்.

பாடல்கள்

அயனம்பாக்கம் சடையநாத வள்ளல் பற்றி காமினி பாடிய பாடல்,

"மாகுன் றனையபொற் றோளான் வழுதிமன்
வான்க ரும்பின்
பாகொன்று சொல்லியைப் பார்த்ததெனப் பார்த்திலன்
பையப் பையப்
போகின்ற புள்ளினங் காள்புழற் கோட்டம்
புகுவ துண்டேல்
சாகின்றனன் என்று சொல்வீர் அயன்றைச்
சடைய னுக்கே"

உசாத்துணை


✅Finalised Page