கல்யாணராமைய்யர்
From Tamil Wiki
- கல்யாணம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கல்யாணம் (பெயர் பட்டியல்)
கல்யாணராமைய்யர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ் நாடக நடிகர், நாடக ஆசிரியர்.
நாடக வாழ்க்கை
கல்யாணராமைய்யர் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓர் நாடகக் குழுவை நடத்தினார்; நாடகங்களிலும் பெண் வேடத்தில் நடித்தார். பாமா விஜயம் நாடகத்தில் சத்தியபாமாவாக நடித்தார். அவரது நாடகக் குழுவில் ராமுடு ஐயர், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இருந்தனர். எட்டப்ப சமஸ்தானத்தின் வெளியீடாக 'பாமாவிஜயம்', 'லதாங்கி' ஆகிய நாடக நூல்களை எழுதி வெளியிட்டார்.
கல்யாணராமைய்யர் குமார எட்டப்ப மகாராஜாவின் ஆதரவைப் பெற்றவர். கல்யாணராமைய்யரின் ஆளுயர படம் குமார எட்டப்ப மகாராஜாவின் சமஸ்தானத்தில் இருந்ததாக டி.கே. ஷண்முகம் 'எனது நாடக வாழ்க்கை' என்ற நூலில் குறிப்பிட்டார்.
நூல் பட்டியல்
- பாமாவிஜயம்
- லதாங்கி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2024, 19:42:09 IST