under review

கல்யாணராமன்

From Tamil Wiki

To read the article in English: Kalyanaraman. ‎

கல்யாணராமன்

கல்யாணராமன் (மே 31, 1952) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். இலக்கிய விமர்சகர். தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

திருச்சி ஜீயபுரத்தில் கிருஷ்ண சுவாமி நடராஜன், சுப்புலட்சுமி இணையருக்கு மே 31, 1952-ல் பிறந்தார். திருவல்லிக்கேணி, இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பு பயின்றார். சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பி.டெக் (Electronics) இளங்கலைப் பட்டம் பெற்றார், கல்கத்தா இந்திய மேலாண்மைக் கழகத்தில் மேலாண்மைத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

கல்யாணராமன்

தனி வாழ்க்கை

இந்திய வானவெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (இஸ்ரோ)இருபத்தியொரு வருடங்கள் விஞ்ஞானியாகப் பணியாற்றினார். துணைக்கோள் மற்றும் தொலைத்தொடர்பு துறை சார்ந்த தனியார் நிறுவனங்களில் பதினான்கு வருடம் உயர் மேலாண்மை பதவிகளிலும், ஆலோசகராகவும் பணியாற்றினார் . 2009 - 2011வரை சென்னையைச் சேர்ந்த ஆசிய ஊடகவியல் கல்லூரியில் இணைப்பேராசிரியராகவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தில் உள்ளடக்கம் சார்ந்த ஆய்வுக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். மனைவி கீதா.

இலக்கிய வாழ்க்கை

கல்யாணராமன்

இவரின் முதல் படைப்பு 'If I could bleed or sleep...' சிறுகதை The Illustrated Weekly of India ஆங்கில இதழில் மார்ச் 1972-ல் வெளியானது. 'கூரை மேலேறிக் கோணச் சுரக்காயை அறுக்கத் தெரியாத குருக்களார்’ கணையாழி மாத இதழில் செப்டம்பர் 1972-ல் வெளியானது. க்ரேஸ் பேலி இயற்றிய சிறுகதையின் மொழியாக்கமான ’நெடுந்தூர ஓட்டக்காரி’ சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தது. ஆதர்ச எழுத்தாளர்களாக ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆங்கிலத்தில் நார்மன் மெய்லர், ஜேம்ஸ் பால்ட்வின் மற்றும் ழான் - பால் சார்த்தர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

1992 முதல் சமகால தமிழ்ப் புனைவிலக்கியம் மற்றும் கவிதை படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்த சிறுகதைகள், கவிதைகள் A Southern Harvest, Vox 2, Hot is the Moon, The Oxford India Anthology of Tamil Dalit Writing, The Greatest Tamil Stories Ever Told, On the Edge, The Orbit of Confusion, The Protector, The Big Leap போன்ற தொகுப்புகளில் இடம்பெற்றன.

திரும்பிச் சென்ற தருணம் (கட்டுரைத் தொகுப்பு), 'வாழ்வும் அழிவும்’ சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை’ போன்ற புத்தகங்களுக்கு முன்னுரை எழுதியுள்ளார். 'முற்போக்கு சாதி எதிர்ப்பு அரசியலைக் கட்டமைக்க பெரியாரைக் கேள்வி கேட்பது அவசியம்’ கட்டுரை ('ஏன் பெரியார் – ஏற்பும் மறுப்பும்’ – கிழக்கு பதிப்பகம்), ’அசோகமித்திரனின் கதையுலகில் பெற்றோரும் பிள்ளைகளும்’ (அசோகமித்திரனை வாசித்தல்’) போன்ற கட்டுரைத் தொகுப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Biblio, Caravan, Indian Literature, The Hindu, The Wire.in, Scroll.in, OPEN magazine, Mint Lounge, The Times of India, Mumbai/Chennai, The Indian Express, Outlook magazine, The Book Review போன்ற நாளிதழ்கள், செய்தித்தாள்கள், மின்னிதழ்களில் கல்யாணராமனின் புத்தக மதிப்புரைகள், விமர்சனக் கட்டுரைகள் வந்துள்ளன.

விருதுகள்

  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் மொழிபெயர்ப்பு விருது 2015 (தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு) - Farewell, Mahatma (தேவிபாரதியின் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்திற்காக கிடைத்தது.
  • புதுமைப்பித்தன் நினைவு விளக்கு இலக்கிய விருது (2015)
  • மொழியாக்கத்திற்கான 'கதா' விருது (1997)
  • பெருமாள் முருகனின் 'பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை' நாவலின் ஆங்கில மொழியாக்கமான 'Poonachi: The Story of a Black Goat' நாவலுக்காக 2022-ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருதை பெற்றார்.
  • கிராஸ்வார்ட் புத்தக பரிசுக்கான குறும்பட்டியலில் அசோகமித்திரனின் Manasarovar' பெருமாள் முருகனின் 'The Goat thief' தேவிபாரதியின் 'Farewell, Mahatma' ஆகிய நூல்கள் இடம்பெற்றுள்ளன.
  • பூமணியின் 'வெக்கை' மற்றும் பெருமாள் முருகனின் 'பூனாச்சி' நாவல்களின் ஆங்கில மொழியாக்கங்கள் 'தி இந்து இலக்கிய விருதுக்கான' குறும்பட்டியலில் இடம்பெற்றன.
. 

நூல்கள்

மொழிபெயர்ப்புகள்
Poonachi: Or the Story of a Black Goat
  • The Colours of Evil by Ashokamitran
  • Sand and other stories by Ashokamitran
  • Mole! by Ashokamitran
  • At the Cusp of Ages by Vaasanthi
  • Manasarovar by Ashokamitran
  • Vaadivasal/Arena by CS Chellappa
  • Farewell, Mahatma by Devibharathi
  • The Ghosts of Meenambakkam by Ashokamitran
  • Still Bleeding from the Wound by Ashokamitran
  • The Goat Thief by Perumal Murugan
  • Poonachi, or the Story of a Black Goat by Perumal Murugan
  • Heat by Poomani
  • The Story of A Goat by Perumal Murugan
  • The Curse: Stories by Salma
  • Breaking Free by Vaasanthi
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் இடம்பெற்ற தொகுப்புகள்
  • A Southern Harvest: Anthology of stories in four South Indian languages edited by Githa Hariharan, (The Mirror by D Dilip Kumar)
  • Vox 2: Seven Stories edited by Jeet Thayil (In the Reception Room by Ashokamitran)
  • KATHA Prize Stories (The Journey by Paavannan)
  • Hot is the Moon edited by Arundhathi Subramaniam, (The Rally by Vaasanthi)
  • The Oxford India Antholog (Indian Quarterly)
  • The Big Leap by Sa Kandasami
Manasarovar
கவிதை மொழிபெயர்ப்புகள் இடம்பெற்ற தொகுப்புகள்
  • Unbound: 2000 Years of Indian Women’s Writing (poems by Kutti Revathi and Malathi Maithri)
  • Name Me a Word: Indian Writers Reflect on Writing: 2018 (poems by Sukirtharani)
  • India in Verse: Contemporary Poetry from 20 Indian Languages and 167 Poets, The Little Magazine
  • Women’s Poetry in Tamil: Some Contemporary Voices selected by Kutti Revathi,
  • Poetry with Prakriti 2007-2008, curated by Ranvir Shah, Prakriti Foundation, Chennai, 2009 (poems by Kutti Revathi and Salma)
  • No Alphabet in Sight: New Dalit Writing from South India (Tamil and Malayalam) (poems by ND Rajkumar and Sukirtharani)
  • The Oxford India Anthology of Tamil Dalit Writing (poems by ND Rajkumar)
  • Other Places: The Sangam House Reader – Volume 2, 2013 (poems by M Yuvan)
  • These My Words: The Penguin Book of Indian Poetry, 2012 (poems by Kutti Revathi)
  • Hot is the Moon edited by Arundhathi Subramaniam (SPARROW, Mumbai, 2008) (poems by Salma, Kutti Revathi and Malathi Maithri)
  • Poems by Salma, Poetry International
  • Poems by Kutti Revathi, Poetry International
  • Poems by Malathi Maithri, Poetry International 2008
  • 'Eternity, though, never blinks’ Three poems by Perundevi in Circumference Magazine
  • 'We are going to meet soon’ Eight poems by Srivalli, Scroll.in
  • 'Nothing imagined is excessive’ Eleven poems by Perundevi, Scroll.in
  • 'Substitute this betrayal with yet another’: Five poems on grief and memories by Salma, Scroll.in
கட்டுரைகள்
  • The City and the World, in Beantown, Boomtown: Writings on Bangalore
  • 'By the Water’s Edge: Ashokamitran’s Thanneer’ in 50 Writers, 50 Books
  • 'Dream-World: Reflections on Cinema and Society in Tamil Country’ in Beyond Bollywood: The Cinemas of South India
  • Clashing by Night: on Poomani’s Agnaadi’ Caravan magazine
  • Boats against the Current: The Kongunadu novels of Perumal Murugan’ Caravan magazine

உசாத்துணை


✅Finalised Page