under review

கலைக்கேசரி

From Tamil Wiki
கலைக்கேசரி

கலைக்கேசரி (இதழ்) (2010) ஈழத்திலிருந்து வெளிவரும் கலை, கலாச்சாரம், பண்பாடு தொடர்பான சர்வதேச மாத இதழ்.

வெளியீடு

'கலைக்கேசரி' Express Newspapers(cye) (pvt)Ltd நிறுவனத்தின் வெளியீடாக இலங்கையில் இருந்து வெளிவரும் மாத இதழ். தை மாதம், 2010 தொடங்கி மாதமொருமுறை வெளிவரும் இதழ். 2010-2020 வரை இதழின் ஆசிரியராக அன்னலட்சுமி இராஜதுரை இருந்தார். இவ்விதழின் மேலாளர் குமார் நடேசன். இந்தியா, இலங்கை, கன்னடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய நாடுகள், சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கம்

கலைக்கேசரி இதழின் நோக்கமாக ”உள்நாட்டுத் தமிழ் மக்களின் கலை, கலாச்சார முயற்சிகளுக்கு மட்டுமின்றி இலங்கை வாழ் சிங்கள, முஸ்லிம் மக்கள், வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள், ஈழத்து தமிழர்களின் கலை, கலாச்சார, பண்பாட்டுச் செயல்பாட்டுக்கும் ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்ட இதழ்” என அன்னலட்சுமி இராஜதுரை முதழ் இதழில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளடக்கம்

கலைக்கேசரி இதழில் தமிழ் பேசும் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், தொன்மை, வரலாறு, வழிபாடு என்பவற்றுடன் சுற்றுலாத்துறை சார் கட்டுரைகளும் அதன் தொடர்புடைய புகைப்படங்களும் வெளிவந்தன. கவிதைகள், கலை, பண்பாடு சார்ந்த ஆளுமைகள், பரதம், நாட்டுக்கூத்துக் கலை, புலம்பெயர் படைப்புகள், ஆன்மிக, சுற்றுலா தலங்கள் பற்றிய கட்டுரைகள், ராசி பலன்கள், நேர்காணல்கள் போன்றவை வெளி வரும் இதழாக உள்ளது.

ஆவணம்

உசாத்துணை


✅Finalised Page