under review

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-இலக்கியச் சாதனை சிறப்பு விருது

From Tamil Wiki

கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. அவற்றுள் தமிழ் இலக்கியத்தில் சாதனைகள் புரிந்தோருக்காக வழங்கப்படும் சிறப்பு விருதும் ஒன்று.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-இலக்கியச் சாதனை சிறப்பு விருது

கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம், உலகளாவிய அலவில், இலக்கிய வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பாற்றி வரும் இலக்கியவாதிகளுக்கு, 2006 முதல் இலக்கிய சாதனை சிறப்பு விருதினை வழங்கி வருகிறது. கேடயமும் 2500/- கனடிய டாலர் பரிசுத்தொகையும் கொண்டது இவ்விருது.

இலக்கியச் சாதனை சிறப்பு விருது பெற்றவர்கள்

ஆண்டு விருது பெற்றவர் வகைமை
2006 சி.ஜே. கனகரத்னம் இலக்கிய விமர்சகர்
2010 சாஷா எபெலிங் சிகாகோ பல்கலைக்கழகத் துணைப் பேராசிரியர், ஆராய்ச்சியாளர்
2013 ஆசீர்வாதம் தம்பதியினர் இலக்கியப் பங்களிப்பாளர்கள்
2015 பத்மநாதன் சோமசுந்தரம்பிள்ள மொழிபெயர்ப்பாளர், இலக்கியவாதி
2015 முனைவர் ப்ரெண்டா பெக் தமிழ் மொழிச் சேவை
2016 டேவிட் ஷூல்மன் தமிழ் மொழிச் சேவை
2016 இரா. இளங்குமரனார் தமிழ் இலக்கிய மேம்பாடு
2017 சிவகுமாரன் சுப்ரமணியன் (செழியன்) கவிஞர்
2017 தி. ஞானசேகரன் எழுத்தாளர்/பத்திரிகையாளர்
2017 முனைவர் நிக்கோலஸ் பிள்ளை மரிய சேவியர் நாடகம்/கலைப் பங்களிப்புக்கான சிறப்பு விருது
2018 ம. நவீன் இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது
2018 எஸ். திருச்செல்வம் இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது
2020 பி.ஜே. திலீப்குமார் இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது
2020 வீரகத்தி சுதர்சன் இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது
2022 வ.ந. கிரிதரன் இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது

உசாத்துணை

கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம்


✅Finalised Page