under review

கண்டு கைசோர்தல்(பெருந்திணை)

From Tamil Wiki

கண்டு கைசோர்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று.தலைவியின் நிலை) கண்டு (தோழி, தாய் போன்ற மற்றொருவர்) செயலறுதலைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மலர்க்கூந்தலையும் வளையலையும் உடைய தலைவியின் அன்பு எல்லை மீறிச் செல்லக் கண்ட தோழி தன் செயலில் சோர்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

போது ஆர் கூந்தல் பொலம்தொடி அரிவை
காதல் கைம்மிகக் கண்டு கை சோர்ந்தன்று(கொளு 17.5)

வெண்பா

ஆம்பல் நுடங்கும் அணிவளையும் ஏகின
கூம்பல் மறந்த கொழுங்கயல்கண் - காம்பின்
எழில் வாய்ந்த தோளி எவனாம்கொல் கானல்
பொழில் எல்லாம் ஈயும் புலம்பு (329)

பொருள்: ஆம்பல் தண்டு போன்ற வளையல் கழலும் ; கயல்போலும் விழிகளும் துயில் இழந்தன ; மூங்கிலைவிட அழகுவாய்ந்த தோளினை உடையாள், கடற்கரைச் சோலை தரும் தனிமையில் என்ன ஆவாளோ?'

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:33:03 IST